(1539)

(1539)

விடந்தா னுடைய அரவம் வெருவச் செருவில் முனநாள்,முன்

தடந்தா மரைநீர்ப் பொய்கை புக்கு மிக்க தாடாளன்

இடந்தான் வையம் கேழ லாகி உலகை யீரடியால்

நடந்தா னுடைய நாமம் சொல்லில் நமோநா ராயணமே!

 

பதவுரை

முனநாள்

முனபொருகால்,

விடம் உடைய அரவம் தான்

விஷத்தையுடைத்தான காளியநாகமானது

வெருவ

அஞ்சும்படியாக

முன்

இடைப்பிள்ளைகளின் முன்னே

தட தாமரை பொய்கை நீர் புக்கு

பெரிய தாமரைகளையுடைய (யமுனையின் ஒருமடுவின்) நீரில் புகுந்து

செருவில்

(அந்த நாகத்தோடு போர் செய்ததில்

மிக்க

மேன்மைபெற்ற

தாளாளன்

திருவடிகளை யுடையவனும்

கேழல் ஆகி

வராஹமூர்த்தியாகி

வையம்

பூமியை

இடந்தான்

குத்தியெடுத்துக் கொணர்ந்தவனும்

ஈர் அடியால்

இரண்டடியாலே

உலகை

உலகங்களை

நடந்தானுடைய

அளந்துகொண்டவனுமான எம்பெருமானுடைய

நாமம் சொல்லில் நமோநாராயணமே-.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- மிக்க தாளாளன் =  காளியன் தலைமேல் திருவடிகளையிட்ட நர்த்தன மாடியவனென்றவாறு.  “பொய்கையிலே போய்ப்புக்கு அவனைத் துரத்தின ஏற்றத்தையுடையவன்” என்றும் வியாக்யானமிருப்பதால் இப்பொருளுக்குச் சேர “தாடாளன்” என்ற பாடமும் கொள்ளத்தக்கதே.

 

English Translation

Our Lord is the Lord who entered the lotus pond and danced on the venai spitting Kaliya’s hoods, the Lord he came as a boar and fork-lifted it Earth, the Lord who straddled the Earth with his flower-soft feet.  His Mantra is Na-ma Na-ra-ya-na-me.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top