(1538)
கிடந்த நம்பி குடந்தை மேவிக் கேழ லாயுலகை
இடந்த நம்பி, எங்கள் நம்பி எறிஞர் அரணழிய
கடந்த நம்பி கடியா ரிலங்கை உலகை யீரடியால்
நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோநா ராயணமே!
பதவுரை
|
குடந்தை மேவி கிடந்த நம்பி |
– |
திருக்குடந்தையிலே பொருந்திப் பள்ளிகொண்டிருக்கின்ற ஸ்வாமியாயும் |
|
கேழல் ஆய் உலகை இடந்த நம்பி |
– |
வராஹரூபியாகி பூமியை (அண்டபித்தியில் நின்றும்) ஒட்டு விடுவித் தெடுத்த ஸ்வாமியாயும் |
|
எங்கள் நம்பி |
– |
எங்களுடைய குறைகளைத் தீர்க்க வல்லவனாயும் |
|
எறிஞர் அரண் அழிய |
– |
சத்துருக்களினுடைய கோட்டை அழியும்படியாக |
|
கடியார் இலங்கை கடந்த நம்பி |
– |
கடூரமானதன்மையுடைய அரக்கர் வாழும் இலங்கையை நாசஞ்செய்த ஸ்வாமியாயும் |
|
உலகை ஈர் அடியால் நடந்த நம்பி |
– |
லோகங்களை இரண்டடியாலே அளந்துகொண்ட ஸ்வாமியாயுமிருக்கிற ஸர்வேச்வரனுடைய |
|
நாமம் |
– |
திருநாமத்தை |
|
சொல்லில் |
– |
சொல்லப்பார்க்கில் |
|
நமோ நாராயணமே |
– |
(அது) பெரிய திருமந்திர மாகும். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ஒன்பது பாசுரங்களிலும் திருநறையூர்ப் பிரஸ்தாவமே இல்லையாயினும், மேல் திருநாமப்பாட்டில் “நறையூர் நெடுமாலை நாவிற்பரவி நெஞ்சிற்கொண்டு நம்பி நாமத்தை” என்று தலைக்கட்டுவதால் இப்பாசுரங்க ளெல்லாவற்றுக்கும் திருநறையூர் இலக்கு என்பது விளங்கும்.
English Translation
Our Lord is the Lord who reclines in kudangai, the Lord who lifted the Earth as a boar, the Lord who burnt the fortified Lanka city to dust, the Lord who measured the Earth in two strides. His Mantra is Na-ma Na-ra-ya-na-me
