(1545)
கடுங்கால் மாரி கல்லே பொழிய அல்லே யெமக்கென்று
படுங்கால் நீயே சரணென் றாயர் அஞ்ச அஞ்சாமுன்
நெடுங்கால் குன்றம் குடையொன் றேந்தி நிரையைச் சிரமத்தால்
நடுங்கா வண்ணம் காத்தான் நாமம் நமோநா ராயணமே.
பதவுரை
|
கடு |
– |
கடுமையான |
|
கால் |
– |
காற்றோடு கூடின |
|
மாரி |
– |
மேகமானது |
|
கல்லே பொழிய |
– |
கற்களையே வர்ஷிக்கையில் |
|
எமக்கு அல்லே என்று |
– |
‘(இது) எங்களுக்குக் காளராத்ரியாகவே யிருக்கின்றது’ என்று |
|
படு்ங்கால் |
– |
நெஞ்சிலேபட்டு |
|
ஆயர் |
– |
இடையர்கள் |
|
நீயே சரண் என்று அஞ்ச |
– |
(எமக்கு நீயே புகலாகவேணுமென்று சொல்லி அஞ்சியிருக்க |
|
அஞ்சாமுன் |
– |
அந்த அச்சத்தினுடைய காரியம் பலிப்பதற்கு முன்னே |
|
நெடு கால் குன்றம் ஒன்று |
– |
சுற்று மலைகளையுடைத்தானவொரு கோவர்த்தனமலையை |
|
குடை ஏந்தி |
– |
குடையாகவெடுத்துப் பிடித்து |
|
நிரையை |
– |
பசுக்கூட்டங்களை |
|
சிரமத்தால் |
– |
ஆயாஸத்தினால் |
|
நடுங்காவண்ணம் |
– |
நோவுபடாதபடி |
|
காத்தான் |
– |
ரக்ஷித்த பெருமானுடைய |
|
நாமம் நமோநாராயணம்-. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- “தான் அறிந்த ஆபத்தும் விலக்காமையுமிறே வேண்டுவது ரக்ஷிக்கைக்கு; ஸ்வாபாவிக ஸம்பந்தத்தில் கண்ணழிவில்லையே” என்ற வியாக்கியான ஸ்ரீஸூக்தி இங்கு உணரத்தக்கது.
அல் – இரவு. ‘சிரமம் – ’ என்னும் வடசொல்விகாரம்.
English Translation
When the halistorm hit the cowherd’s haunt, even before the cowherds could say, “Krishna, protect us!”, the Lord lifted a huge mountain as an Umbrella and protected the cows from the cold, -his Mantra is Na-ma Na-ra-ya-na-me.
