(1545)

(1545)

கடுங்கால் மாரி கல்லே பொழிய அல்லே யெமக்கென்று

படுங்கால் நீயே சரணென் றாயர் அஞ்ச அஞ்சாமுன்

நெடுங்கால் குன்றம் குடையொன் றேந்தி நிரையைச் சிரமத்தால்

நடுங்கா வண்ணம் காத்தான் நாமம் நமோநா ராயணமே.

 

பதவுரை

கடு

கடுமையான

கால்

காற்றோடு கூடின

மாரி

மேகமானது

கல்லே பொழிய

கற்களையே வர்ஷிக்கையில்

எமக்கு அல்லே என்று

‘(இது) எங்களுக்குக் காளராத்ரியாகவே யிருக்கின்றது’ என்று

படு்ங்கால்

நெஞ்சிலேபட்டு

ஆயர்

இடையர்கள்

நீயே சரண் என்று அஞ்ச

(எமக்கு நீயே புகலாகவேணுமென்று சொல்லி அஞ்சியிருக்க

அஞ்சாமுன்

அந்த அச்சத்தினுடைய காரியம் பலிப்பதற்கு முன்னே

நெடு கால் குன்றம் ஒன்று

சுற்று மலைகளையுடைத்தானவொரு கோவர்த்தனமலையை

குடை ஏந்தி

குடையாகவெடுத்துப் பிடித்து

நிரையை

பசுக்கூட்டங்களை

சிரமத்தால்

ஆயாஸத்தினால்

நடுங்காவண்ணம்

நோவுபடாதபடி

காத்தான்

ரக்ஷித்த பெருமானுடைய

நாமம் நமோநாராயணம்-.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “தான் அறிந்த ஆபத்தும் விலக்காமையுமிறே வேண்டுவது ரக்ஷிக்கைக்கு; ஸ்வாபாவிக ஸம்பந்தத்தில் கண்ணழிவில்லையே” என்ற வியாக்கியான ஸ்ரீஸூக்தி இங்கு உணரத்தக்கது.

அல் – இரவு. ‘சிரமம் – ’ என்னும் வடசொல்விகாரம்.

 

English Translation

When the halistorm hit the cowherd’s haunt, even before the cowherds could say, “Krishna, protect us!”, the Lord lifted a huge mountain as an Umbrella and protected the cows from the cold, -his Mantra is Na-ma Na-ra-ya-na-me.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top