(1547)

(1547)

வாவித் தடஞ்சூழ் மணிமுத் தாற்று நறையூர் நெடுமாலை

நாவில் பரவி நெஞ்சில் கொண்டு நம்பி நாமத்தை

காவித் தடங்கண் மடவார் கேள்வன் கலிய னொலிமாலை

மேவிச் சொல்ல வல்லார் பாவம் நில்லா வீயுமே.

 

பதவுரை

வாவி தடம் சூழ்

நடைவாவிகளாலும் தடாகங்களாலும் சூழப்பட்டதும்

மணிமுத்தாறு

மணிமுத்தாற்றை யுடையதுமான

நறையூர்

திருநறையூரி லெழுந்தருளியிருக்கிற

நெடுமாலை

ஸர்வேச்வரனை

நாவின் பரவி

நாவினால் துதித்தும்

நெஞ்சில் கொண்டு

நெஞ்சில் சிந்தித்தும்

நம்பி நாமத்தை

அந்தத் திருநறையூர் நம்பியின் திருநாமம் விஷயமாக

காவி தட கண் மடவார்கேள்வன்

கருநெய்தற் பூப்போன்று பரந்த கண்களையுடைய மடவார்கட்கு விரும்பத் தகுந்தவராயிருந்த

கலியன்

திருமங்கையாழ்வார்

ஒலி

அருளிச்செய்த

மாலை

இச்சொல்மாலையை

மேவி

விரும்பி

சொல்ல வல்லார் பாவம்

சொல்ல வல்லவர்களுடைய பாபங்கள்

நில்லா

நிற்கமாட்டாமல்

வீயும்

அழிந்துபோதும்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- திருநறையூர் ஸந்நிதியருகிலுள்ள திவ்யபுஷ்கரிணிக்கு மணிமுத்தாறென்று திருநாமமென்ப.  திருக்கோட்டியூரருகிற் பெருகும் மணிமுத்தாறு வேறு.

“காவித்தடங்கண் மடவார் கேள்வன்” என்றது முன்புற்ற நிலைமையைக் கணிசித்தா இவ்விடத்திலே வியாக்கியானவாக்யம காண்மின்; இப்போது எனக்குப் பிறந்த செவ்வியம் கண்டிகோளே; இப்போது மநோவாக்காயங்கள் மூன்றுக்கும் இதுவே விஷயமானரளி கண்டிகோளே.”

 

English Translation

These songs of the Lord’s Mantra in Tirunaraiyur surrounded by the Kaver’s Man-muttaru river, are by Kaliyan the husband of many wide-eyed dames, resident of Tirunaraiyur, Those who can master it will be rid of their karmic account.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top