(1531)

(1531)

துன்றோளித் துகில்படலம் துன்னியெங்கும் மாளிகைமேல்

நின்றார வான்மூடும் நீள்செல்வத் திருநறையூர்

மன்றாரக் குடமாடி வரையெடுத்து மழைதடுத்த

குன்றாரும் திரடோளன் குரைகழலே யடைநெஞ்சே.

 

பதவுரை

துன்று

–

நெருங்கியும்

ஒளி

–

ஒழுங்குபெற்று மிருக்கிற

துகில் படலம்

–

த்வஜபடங்களின் திரள்கள்

மாளிகை மேல்

–

மாளிகைகளின் மேல்

எங்கும் துன்னி

–

எல்லாவிடங்களிலும் நிபிடமாய்

ஆர நின்று

–

பரம்பியிருந்து

வான் மூடும்

–

ஆகாசத்தை மறையா நின்றதாய்

நீள் செல்வம

–

நிறைந்த செல்வத்தை யுடையதான

திரு நறையூர்-;

மன்று ஆர

–

வெளிநிலமெங்கும்

குடம் ஆடி

–

குடக்கூத்தாடினவனும்

வரை எடுத்து

–

கோவர்த்தன மலையைக் குடையாக ஏந்தி

மழை தடுத்த

–

மழையைத்  தடைசெய்தவனும்

குன்று ஆரும் திரள் தோளன்

–

மலைபோன்று திரண்ட திருத்தோள்களையுடையனுமான பெருமானுடைய

குரை கழலே

–

ஒலிக்கின்ற வீரக்கழலை யணிந்த திருவடிகளையே

நெஞ்சே! அடை-.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- திருமாளிகைகளில் த்வஜபடங்கள் கட்டியிருப்பதாக வருணித்தல் செல்வமிகுதியை விளக்குமென்க.

குரைகழல் இரட்டுற மொழிதலாகக்கொண்டு குரைகழலையுடைய கழல்என்க கழல் – காலிலணியும் ஆபரணத்துக்கும் காலுக்கும் பெயர்.  குரைகழல் – வினைத்தொகைப் யுறத்துப்பிறந்த அன்மொழித்தொகை.

 

English Translation

O Heart!  Rows of cloth flutter on mansions everywhere density, hiding the sky in wealthy Tirunaraiyur.  The Lord danced with pots and lifted a mountain to stop the rains with his mighty shoulders.  Attain his resounding feet.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top