(1527)

(1527)

மன்னு மதுரை வசுதேவர் வாழ்முதலை

நன்னறையூர் நின்ற நம்பியை வம்பவிழ்தார்

கன்னவிலும் தோளான் கலிய னொலிவல்லார்

பொன்னுலகில் வானவர்க்குப் புத்தேளி ராகுவரே.

 

பதவுரை

மன்னு

(பகவத்ஸம்பந்தம் ஒரு நாளும் மாறாமல்) நித்யமாயிருக்கிற

மதுரை

வடமதுரையில்

வசுதேவர் வாழ் முதலை

வசுதேவருடைய வாழ்வுக்கு மூலகந்தமாக வந்து பிறந்தவனான

நல் நறையூர் நின்ற நம்பியை-;

வம்பு அவிழ் தார்

பரிமளம் விளங்குகின்ற மாலையையுடையராய்

கல் நவிலும் தோளான்

மலையென்று சொல்லத் தகுந்த புஜங்களை யுடையரான

கலியன்

திருமங்கையாழ்வார்

ஒலி

அருளிச்செய்த இத்திரு மொழியை

வல்லார்

ஓதவல்லவர்கள்

பொன் உலகில்

பரமபதத்திற்சென்று

வானவர்க்கு

அங்குள்ள நித்யஸூரிகளுக்கு

புத்தேளிர் ஆகுவர்

பூஜ்யராகப் பெறுவர்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- மன்னு மதுரை – பகவத் ஸம்பந்தம் ஒருநாளும் மாறாமல் நித்யமாயிருக்கப்பெற்ற மதுரை என்றபடி; முதலில் ஸ்ரீவாமநமூர்த்தி நெடுநாளளவும் தவம்புரிந்த ஸித்தாச்ரமமாயிருந்தும், பிறகு ஸ்ரீசத்ருக்நாழ்வான் பிரதிபக்ஷ நிரஸநம் பண்ணி அரசாட்சிபுரிந்த இடமாயிருந்தும், பின்பு ஸ்ரீக்ருஷணபகவான் திருவவதரித்த விடமாயும் ஆக விப்படி பகவத்ஸம்பந்தம் இடையறாது அநுவர்த்திக்கப்பெற்ற ஊர்.

புத்தேளிர் – தேவதைகள் என்றபடி.  திருவாசசிரியத்தில் “நான் முகம் புத்தேள்” என்ற நம்மாழ்வார்பிரயோகமுங்காண்க.  நித்யஸூரிகளால் கொண்டாடப்படுவர்களென்றபடி.

 

English Translation

This garland of Tamil songs by bee-humming garland-wearing strong-armed kaliyan extols the Lord of Mathura, Vasudev’s bright child, who resides in Naraiyur.  Those who master it will become Gurus to the gods.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top