(1514)

(1514)

மிடையா வந்த வேல்மன்னர் வீய விசயன் தேர்கடவி,

குடையா வரையொன் றெடுத்தாயர் கோவாய் நின்றான் கூராழிப்

படையான் வேதம் நான்கைந்து வேள்வி யங்க மாறிசையேழ்

நடையா வல்ல அந்தணர்வாழ் நறையூர் நின்ற நம்பியே.

 

பதவுரை

மிடையா வந்த

நெருங்கி (கூட்டங்கூட்டமாக) (போர்க்களததில்) வந்து நின்ற

வேல் மன்னர்

வேற்படைக்கையரான

வீய

தொலையும்படி

விசயன் தேர் கடவி

அர்ஜுனனுடைய தேரை நடத்தினவனும்

ஒன்று வரை

கோவர்த்தனமென்கிற ஒரு மலையை

குடையா எடுத்து

குடையாகத் தூக்கிப் பிடித்து

ஆயர் கோ ஆய் நின்றான்

இடையர்களுக்கு ரக்ஷகனாய் நின்றவனும்

கூர் ஆழி படையான்

கூர்மைபொருந்திய திருவாழியை ஆயுதமான வுடையவனுமான எம்பெருமான்,-

வேதம் நான்கு

நான்கு வேதங்களையும்

ஐந்து வேள்வி

பஞ்ச மஹாயஜ்ஞங்களையும்

ஆறு அங்கம்

ஆறு வேதாங்கங்களையும்

ஏழ் இசை

ஸப்த ஸ்வரங்களையும்

நடை ஆ வல்ல

எப்போதும் போது போக்காகக்கொண்ட

அந்தணர்

பிராமணர்

வாழ்

வாழுமிடமான

நறையூர், நின்ற நம்பி -.

 

English Translation

The Lord – who drove the chariot for Vijayan and destroyed the armed mighty kings, who lifted a mount and stood as the cowherd clan’s protector and who wields the sharp discus-resides in Naraiyur where Vedic seers are adept in the four Vedas, five sacrifices, six angas and seven svaras of music.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top