(1515)

(1515)

பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்கப் பாரதத்து

கந்தார் களிற்றுக் கழல்மன்னர் கலங்கச் சங்கம் வாய்வைத்தான்

செந்தா மரைமே லயனோடு சிவனு மனைய பெருமையோர்

நந்தா வண்கை மறையோர் வாழ் நறையூர் நின்ற நம்பியே!

பதவுரை

பந்து ஆர் விரலாள்

பந்து பிடித்து விளையாடும் விரலையுடையளான
பாஞ்சாலி

த்ரௌபதியானவள்
கூந்தல் முடிக்க

குழல் முடித்துக் கொள்வதற்காக,
பாரதத்து

பாரதப்போரில்
கந்து ஆர் களிறு

(மதஜலத்தின்) மணம் பொருந்திய யானைகளின் மேலேறியிருப்பவர்களும்
கழல்

வீரக்கழலை யணிந்தவருமான
மன்னர்

அரசர்கள் (துரியோதனாதியர்)
கலங்க

மதிகலங்குமாறு
சங்கம்

தனது  ஸ்ரீபாஞ்சஜன்யத்தை
வாய் வைத்தான்

திருப்பவளத்தில் வைத்து ஊதின பெருமான்,-
செம் தாமரை மேல் அயனோடு சிவனும் அனைய

கமலாஸநனான பெருமானோடும் ருத்ரனோடும் ஒத்த
பெருமையோர்

பெருமைவாய்ந்தவர்களும்
நந்தா வண் கை

ஒரு காலும் குறைபடாத ஔதார்யத்தை யுடையவர்களுமான
மறையோர்

பிராமணர்கள்
வாழ்

வாழப்பெற்ற

நறையூர். நின்ற நம்பி-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஸ்ரீ வசநபூஷணத்தில் – “பாண்டவர்களையும் நிரஸிக்க ப்ராப்தமாயிருக்க, வைத்தது – த்ரௌபதியுடைய மங்களஸூத்ரத்துக்காக.  அர்ஜுநனக்கு தூத்யஸாரத்யங்கள் பண்ணிற்றும் ப்ரபத்த்யுபதேசம் பண்ணிற்றும் இவளுக்காக.”  என்றருளிச்செய்துள்ள ஸூத்ரங்கள் இங்கே அறியத்தக்கன.  (த்ரௌபதியைத் துரியோதநாதிகள் மஹாஸபையில் துகிலுரிந்து அவமானப்டுத்தியதைப் பாண்டவர்கள் கண்டிருக்கச் செய்தேயும் சூதிலே தோற்றமையை நினைத்துப் பொறுத்திருந்தாலும் “சங்கசக்ர கதாபாணே! த்வாரகாநிலயாச்யுத! – கோவிந்த! புண்டரீகாக்ஷ! ரக்ஷமாம் சரணாகதாம்” என்று அவள் கண்ணபிரானைச் சரணமடைந்த பின்பு பரிபவிக்கிறவளவில் ‘எம்பெருமானடியார்களைப் பிறர் பரிபவப் படுத்தக்ண்டால் சக்தியுள்ளவனாகில விலக்கவேணும்; சக்தியற்றவனாகில் வருத்தத்துடனே கண்மறையப் போகவேணும்’ எனகிற விசேஷசாஸ்த்ரமர்யாதையை நோக்கியாவது, (அல்லது) தங்களிடத்தில் ஸ்ரீ க்ருஷ்ணனுக்குள்ள ஸ்நேஹபக்ஷபாதங்களை நினைத்து அவனைச் சரணமடைந்தவள் பரிபவப்படுத்தக்கண்டால் சக்தியுள்ளவனாகில் விலக்கவேணும்; ‘சக்தியற்றவனாகில் வருத்தத்துடனே கண்மறைப் போகவேணும்’ என்கிற விசேஷசாஸ்த்ரமர்யாதையை நோக்கியாவது, (அல்லது) தங்களிடத்தில் ஸ்ரீக்ருஷ்ணனுக்குள்ள ஸ்நேஹபாவங்களை நினைத்து  ‘அவனைச் சரணமடைந்தவள் பரிவப் படுவதை நாம் பார்த்திருந்தால் நாளைக்கு அவன் முகத்தில் எப்படி விழிப்பது’ என்று அஞ்சியாவது விரைந்தெழுந்து விலக்கவேண்டியிருக்க அது செய்யாமல் ஆடாது அசங்காது-உட்கார்ந்திருந்தனர்; ஆகவே, பரிபவப்படுத்தின துர்யோதநாதிகளைப் போல பரிபவங்கண்டிருந்த இப்பாண்டவர்களையும் தலையறுத்துப் போடவேண்டியிருக்க அவர்களை மாத்திரம் உயிரோடே வாழும்படி வைத்தது த்ரௌபதிக்கு அபிமதமான திருமங்கலியம போகாமைக்காக.  அவளுடைய விரித்ததலையைக் காணமாட்டாத கண்ணன் வெறுங்கழுத்தை எப்படி காண்பான்? (இத்தால் அடியார்களைப் பரிபவிக்கின்றவர்களைப்போலவே அப்பரிவத்தைப் பார்த்துக்கொண்டிருப்பவர்களும் தண்டிக்கத்தக்கவர் என்பதும், அப்படி தண்டனைக்க உரியவர்தாமே அடியார்களோடு விடவொண்ணாத ஒரு ஸம்பந்தமுடையவர்களாகில் அவர்களும் அவ்வடியவர்களுக்காக எம்பெருமானாலே ரக்ஷிக்கப்படுவர் என்பதும் விளங்கும்.)  இப்படி தலையறுத்துப் போடவேண்டும்படியான குற்றவாளிகளுள் ஒருவனான அர்ஜுநனுக்குக் கண்ணபிரான் இழிதொழில் செய்ததும் பரமாஹஸ்யத்தை உபதேசித்தது்மெல்லாம் இந்த த்ரௌபதிக்காகவேயாம்.  தூதுபோனது யுத்தத்தை விளைவிப்பதற்காக.  ஸாரதியாய் நின்றது ‘ஆயுதமெடுக்கக்கூடாது’ என்ற எதிரிகளின் வேண்டுகோளுக்கு உடன்பட்டபடியால் தேர்க்காலாலே அவ்வெதிரிகளை அழிப்பதற்காக.  ப்ரபக்தியை உபதேசித்தது – ‘யுத்தம் பண்ணமாட்டேன்’ என்றிருந்தவனை ‘உன் சொற்படி செய்கிறேன்’ என இசைவித்து யுத்தத்திலே முயல்விப்பதற்காக.  ஆக இவை யெல்லாம் செய்தது சரணாகதையான இவளுடைய ஸங்கல்பத்தின்படியே துர்யோதநாதிகளை யொழித்து இவள் கூந்தலை முடியச் செய்வதற்காகவே யென்றதாயிற்று.

திருநறையூரிலுள்ள அந்தணர்கள் பிரமருத்ர்ர்களைப்போலே ஸ்ருஷ்டி ஸம்ஹாரங்கள் செய்யவும் வல்லர் என்பது மூன்றாமடியின் கருத்து. “***“ என்ற ஆளவந்தார் ஸ்தோத்ர்ரத்ந ஸ்ரீஸூக்தியும், அதற்கு நம்முடைய விவரணங்களும் காண்க.

English Translation

The Lord who blew his conch in the battlefield and terrified the elephant-mounted warrior kings in the Bharata war, and made the ball-clasping Panchail gather her hair once again, resides in Narayiur where benevolent Vedic seers rival the lotus-seated Brahma and Siva in their glories.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top