(1491)
உறியார் வெண்ணெ யுண்டு உர லோடும் கட்டுண்டு,
வெறியார் கூந்தல் பின்னை பொருட்டுஆன் வென்றானூர்,
பொறியார் மஞ்ஞை பூம்பொழில் தோறும் நடமாட,
நறுநாண் மலர்மேல் வண்டிசை பாடும் நறையூரே.
பதவுரை
|
உறி ஆர் வெண்ணெய் உண்டு |
– |
உறிகளிலே நிறைத்து வைத்த வெண்ணெயை வாரி உட்கொண்டு |
|
உரலோடும் கட்டுண்டு |
– |
(அக்குற்றத்திற்காக) உரலோடு சேர்த்துக்கட்டப்பட்டவனும் |
|
வெறி ஆர் கூந்தல் பின்னை பொருட்டு |
– |
பரிமளம் மிக்க கூந்தலையுடையம நப்பி்ன்னை பிராட்டிக்காக |
|
ஆன் வென்றால் |
– |
(ஏழு) எருதுகளை வலியடக்கினவனுமான பெருமானுடைய |
|
ஊர் |
– |
திவ்யதேசம் (எதுவென்றால்) |
|
பொறி ஆர் மஞ்ஞை |
– |
புள்ளிகள் நிரம்பிய மயில்கள் |
|
பூ பொழில் தோறும்நடம் ஆட |
– |
பூஞ்சோலைகளெங்கும் கூத்தாடப் பெற்றதும் |
|
வண்டு |
– |
வண்டுகள் |
|
நறு நாள் மலர் மேல் |
– |
மணம்மிக்க அப்போதலர்ந்த பூக்களிலே இருந்துகொண்டு |
|
இசை பாடும் |
– |
இசைப்பாட்டுகளைப் பாடப்பெற்றதுமான |
|
நறையூர் |
– |
திருநறையூர். |
English Translation
The Lord stole butter and was fethered to a mortar, he fought seven bulls to win the hand of Nappinnai. He resides in Naraiyur where spotted peacocks dance to the song of the bumble bees in fragrant nectared groves.
