(1490)

(1490)

ஆனைப் புரவி தேரொடு காலா ளணிகொண்ட,

சேனைத் தொகையைச் சாடி யிலங்கை செற்றானூர்,

மீனைத் தழுவி வீழ்ந்தெழும் மள்ளர்க் கலமந்து,

நானப் புதலில் ஆமை யொளிக்கும் நறையூரே.

 

பதவுரை

ஆனை புரவி தேரொடுகாலாள் அணிகொண்ட

யானைகளும் குதிரைகளும் தேர்களும் காலாள்களுமாக அணிவகுக்கப்பட்ட

சேனை தொகையை சாடி

சேனைக் கூட்டத்தைச் சிதைத்து

இலங்கை செற்றான்

இலங்காபுரியை அழித்த பெருமானுடைய

ஊர்

திவ்யதேசம் (எதுவென்றால்)

மீனை

மீன்களை

தழுவி

(பிடிப்பதற்காக) இரண்டு கைகளாலும் அணைத்து

வீழ்ந்து

(பின்பு அவற்றால் தள்ளுண்டவர்களாய்க்)கீழே விழுந்து

எழும்

(பின்னும் அவற்றைப் பிடிக்க ஆசையினால்) எழுந்திருக்கிற

மீனவர்க்கு

உழவர்களுக்கு

அலமந்து

அஞ்சி

ஆமை

ஆமையானது

நானம் புதலில்

மஞ்சள் புதரிலே

ஒளிக்கும்

ஒளிந்துகொள்ளுமிடமான

நறையூர்

திருநறையூராம்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (மீனைத்தழுவி இத்யாதி) அவ்விடத்தில் நிலப்பண்பாலே மலைகள் போலே வளந்நீ திருக்குமாம் மீன்கள்; அவற்றைப் பிடிக்கிற உழவர்கள் இரண்டு கையாலுமாகத் தழுவுவர்கள்; அவை மிக்க வலியுள்ளனமையாதலால், பிடிப்பவர்களை உதறித்தள்ளிவிட்டுப் போய்விடும்; அங்ஙனம் தள்ளப்பட்டு விழுந்த உழவர்கள் மறுபடியும் அவற்றைப்பிடிக்க எழுந்திருப்பர்கள்; அதைக்கண்ட ஆமையானவை அஞ்சி வரப்பிலேநின்ற மஞ்சள் பற்றையிலே புகுந்து மறையும்.  இப்படிப்பட்ட வயல் வளத்தையுடையதாம் திருநறையூர்.

 

English Translation

The Lord destroyed the city of Lanka, battling against elephants, horses, chariots and foot-men, He resides in Naraiyur where tillers of the land fall upon mudskippers to catch them, and frightened turtles scurry into holes and borrows.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top