(1567)

(1567)

நன்னீர் வயல்புடைசூழ் நறையூர்நின்ற நம்பியை

கன்னீர மால்வரைத்தோள் கலிகன்றி மங்கையர்கோன்,

சொன்னீர சொல்மாலை சொல்வார்கள், சூழ்விசும்பில்

நன்னீர்மை யால்மகிழ்ந்து நெடுந்காலம் வாழ்வாரே.

 

பதவுரை

நல் நீர் வயல் புடை சூழ் நறையூர்

–

நல்ல நீரையுடைய கழனிகளாலே நாற்புறமுஞ் சூழப்பட்ட திருநறையூரில்

நின்ற

–

நித்யாவஸம் செய்தருள்கின்ற

நம்பியை

–

எம்பெருமான் விஷயமாக,

கல் நீர மால் வரை தோள்

–

ஒலிக்கின்ற அருவிநீரையுடைய பெரிய மலைபோன்ற திருத்தோள்களை யுடையவரும்

மங்கையர் கோன்

–

திருமங்கை நாட்டிலுள்ளார்க்குத் தலைவருமான

கலிகன்றி

–

திருமங்கையாழ்வார் (அருளிச்செய்த)

சொல் நீர

–

கொண்டாடிச் சொல்ல வேண்டுவதையே ஸ்வபாவமாகவுடைய

சொல் மாலை

–

இச்சொல் மாலைகளை

சொல்லுவார்கள்

–

கற்பவர்கள்

சூழ் விசும்பில்

–

பெரிய திருநாட்டில்

நல் நீர்மையால்

–

(நித்தியகைங்கர்யமாகிற) சிறந்த ஸ்வபாவத்தோடு கூடி

நெடுங்காலம்

–

சாச்வதாமாக

மகிழ்ந்து வாழ்வார்

–

பரமாநந்தங்கொண்டு வாழப்பெறுவர்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கல்நீர = ‘நீர’ என்றது நீர்மையை (ஸ்வாபத்தை) யுடைய என்றபடி.  ‘நீர்மை’ என்னும் பண்புப் பெயரில் ஈறுபோயிற்று; அ – குறிப்புப் பெயரெச்ச விகுதி.  ‘சொல் நீர’ என்பதிலும் இங்ஙனமே கொள்க.  சொல் – கொண்டாடிச் சொல்லப்படுவதை, நீர – இயற்கையாகவுடைய என்றபடி.  “இத்தை யநுஸந்தித்தார்க்கு ‘இதொரு சப்தமே!’ என்று கொண்டாடு மிதுவே ஸ்வபாவமாம்படியிருக்கிற சொல்தொடையை’ என்பது பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியான ஸ்ரீ ஸூக்தி.

 

English Translation

The generous as-the-raincloud Mangai-king-Kalikanri has sung this song-garland as offering to the Lord who resides in Naraiyur surrounded by watered groves and fields.  Those who master it will live in great joy on Earth.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top