(1567)
நன்னீர் வயல்புடைசூழ் நறையூர்நின்ற நம்பியை
கன்னீர மால்வரைத்தோள் கலிகன்றி மங்கையர்கோன்,
சொன்னீர சொல்மாலை சொல்வார்கள், சூழ்விசும்பில்
நன்னீர்மை யால்மகிழ்ந்து நெடுந்காலம் வாழ்வாரே.
பதவுரை
|
நல் நீர் வயல் புடை சூழ் நறையூர் |
– |
நல்ல நீரையுடைய கழனிகளாலே நாற்புறமுஞ் சூழப்பட்ட திருநறையூரில் |
|
நின்ற |
– |
நித்யாவஸம் செய்தருள்கின்ற |
|
நம்பியை |
– |
எம்பெருமான் விஷயமாக, |
|
கல் நீர மால் வரை தோள் |
– |
ஒலிக்கின்ற அருவிநீரையுடைய பெரிய மலைபோன்ற திருத்தோள்களை யுடையவரும் |
|
மங்கையர் கோன் |
– |
திருமங்கை நாட்டிலுள்ளார்க்குத் தலைவருமான |
|
கலிகன்றி |
– |
திருமங்கையாழ்வார் (அருளிச்செய்த) |
|
சொல் நீர |
– |
கொண்டாடிச் சொல்ல வேண்டுவதையே ஸ்வபாவமாகவுடைய |
|
சொல் மாலை |
– |
இச்சொல் மாலைகளை |
|
சொல்லுவார்கள் |
– |
கற்பவர்கள் |
|
சூழ் விசும்பில் |
– |
பெரிய திருநாட்டில் |
|
நல் நீர்மையால் |
– |
(நித்தியகைங்கர்யமாகிற) சிறந்த ஸ்வபாவத்தோடு கூடி |
|
நெடுங்காலம் |
– |
சாச்வதாமாக |
|
மகிழ்ந்து வாழ்வார் |
– |
பரமாநந்தங்கொண்டு வாழப்பெறுவர். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கல்நீர = ‘நீர’ என்றது நீர்மையை (ஸ்வாபத்தை) யுடைய என்றபடி. ‘நீர்மை’ என்னும் பண்புப் பெயரில் ஈறுபோயிற்று; அ – குறிப்புப் பெயரெச்ச விகுதி. ‘சொல் நீர’ என்பதிலும் இங்ஙனமே கொள்க. சொல் – கொண்டாடிச் சொல்லப்படுவதை, நீர – இயற்கையாகவுடைய என்றபடி. “இத்தை யநுஸந்தித்தார்க்கு ‘இதொரு சப்தமே!’ என்று கொண்டாடு மிதுவே ஸ்வபாவமாம்படியிருக்கிற சொல்தொடையை’ என்பது பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியான ஸ்ரீ ஸூக்தி.
English Translation
The generous as-the-raincloud Mangai-king-Kalikanri has sung this song-garland as offering to the Lord who resides in Naraiyur surrounded by watered groves and fields. Those who master it will live in great joy on Earth.
