(1550)

(1550)

தாரேன் பிறர்க்குன் னருளென் னிடைவைத்தாய்,

ஆரே னதுவே பருகிக் களிக்கின்றேன்,

காரேய் கடலே மலையே திருக்கோட்டி

யூரே, உகந்தா யையுகந் தடியேனே

 

பதவுரை

(திருநறையூர்ப் பெருமானே!)

உன் அருள் என்னிடை வைத்தாய்

–

உனது திருவருளை அடியேன் பக்கலிலே நிலை நிறுத்தினாய், (இனி இவ்வருளை)

பிறர்க்கு

–

வேறொருவர்க்கும்

தாரேன்

–

விட்டுக்கொடுக்கக் கடவேனல்லேன்;

கார் ஏய் கடலே

–

மேகங்கள் படியப்பெற்ற திருப்பாற்கடலையும்

மலையே

–

திருமலையையும்

திருக் கோட்டியூரே

–

திருக்கோட்டியூரையும்

உகந்தாயை

–

திருவுள்ள முவந்து இருப்பிடமாகக் கொண்டிருக்கிறவுன்னை

அடியேன் உகந்து

–

அடியேன் விரும்பி

ஆரேன்

–

பர்யாப்தி பெறாதவனாகி

அதுவே பருகி களிக்கின்றேன்

–

அவ்வருளையே அனுபவித்து ஸந்தோஷப்படுகின்றேன்



ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- அடியேனுடைய பிரார்த்தனையைத் தலைக்கட்டி யருளாமல் நீ உபேக்ஷிக்குமளவிலும் உன்னையே தொடர்ந்து நான் கூப்பிடும்படியாக இவ்வளவு அருள் என்மேல் செய்து வைத்திருக்கின்றாய்; இப்படிப்பட்ட அருளுக்கு மற்று ஆரேனும் இலக்காக வல்லாருண்டோ? இவ்வருள் பெற்றவன் நானொருவனே யாவன்;  இப்படிப்பட்ட அருளை நீ வேறொருவரிடத்தில் செய்வதாயிருந்தாலும் நான் ஸம்மதிக்கமாட்டேன்; உன்னுடைய கிருபையை அநுபவித்து ஒருகாலும் பர்யாப்தி பெறாதவனாகி மேன்மேலும் அபிநிவேச முடையவனாய் அதையே அநுபவித்துச் செருக்குற்று யமாதிகள் அடியிட்டுத் திரியும்படியானேன் என்கிறார்.

பின்னடிகட்குப் பெரியவாச்சான்பிள்ளை வியாக்யான ஸ்ரீ ஸூக்தி காண்மின் :– “ஸௌபரி பல வடிவுகொண்டாப்போலே அநேகம் வடிவுகொண்டு அவ்வோவிடங்கள் தோறும் இனி இதுக்கு அவ்வருகில்லையென்னும்படி வர்த்தியா நின்றான்” என்று.  முதலடியில், தாரேன் என்றது – தரவொட்டேன் என்றபடி.


English Translation

You showered your grace on me, I shall not share it with others, Out of love for me, you reside in the Ocean of Milk, on the hills of venkatam and in Tirukkottiyur, I keep drinking that joy without satiation.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top