(1414)
சுரிகுழல் கனிவாய்த் திருவினைப் பிரித்த கொடுமையிற் கடுவிசை யரக்கன்,
எரிவிழித் திலங்கு மணிமுடி பொடிசெய் திலங்கைபாழ் படுப்பதற் கெண்ணி,
வரிசிலை வளைய அடிசரம் துரந்து மறிகடல் நெறிபட, மலையால்
அரிகுலம் பணிகொண் டலைகட லடைத்தான் அரங்கமா நகரமர்ந் தானே.
பதவுரை
|
சுரி குழல் கனிவாய் திருவினை பிரித்த |
– |
சிறந்த கூந்தலையும் கொவ்வைக்கனிபோன்ற அதரத்தையும் உடையளான பிராட்டியை வேறுபடுத்தின |
|
கொடுமையில் கடுவிசை அரக்கன் |
– |
கொடுமையில் பெரிய வேகத்தையுடையனான இராவணனுடைய |
|
எரி விழித்து இலங்கு மணிமுடி பொடி செய்து |
– |
அக்நிபோன்று விளங்கின மணிகளழுத்தின கிரீடங்களைப் பொடிபடுத்தி |
|
இலங்கை |
– |
லங்காபுரியை |
|
பாழ்படுப்ப |
– |
பாழாக்கி விடவேணுமென்று ஸங்கல்பித்து |
|
(கடலைக் கடக்கவேண்டிக் கடலரசனைநோக்கி) |
||
|
வரி சிலை வளைய அடு சரம் துரந்து |
– |
அழகிய வில்லை வளைத்துக் கொலையம்புகளைப் பிரயோகித்து, (அவ்வளவிலே) |
|
மறி கடல் நெறிபட |
– |
அலைமடிகின்ற கடல் வழிபட்டு அமைந்திட |
|
அரி குலம் பணி கொண்டு அலை கடல் மலையால் அடைத்தான் |
– |
வாநர ஸமூஹங்கள் கைங்கரியம் செய்யப் பெற்று அலைகடலை மலைகளினால் அணைகட்டின பெருமான் |
|
அரங்கம் மா நகர் அமர்ந்தான்–. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- அரிகுலம் – ‘ஹாரிகுலம்’ என்ற வடசொல் தொடர்விகாரம். ஹாரி – குரங்கு.
English Translation
The wicked looking Rakshasa, unexcelled in his tyranny, separated the curl-tressed coral-lipped lady Sita from her Lord. With the intent of destroying Lanka the Lord subdued the ocean with this terrible bow and built a bridge over it with rocks. He entered the city with an army of monkeys and felled the ten crowned heads of the mighty Ravana. He is the resident of Arangama-Nagar.
