(1414)

(1414)

சுரிகுழல் கனிவாய்த் திருவினைப் பிரித்த கொடுமையிற் கடுவிசை யரக்கன்,

எரிவிழித் திலங்கு மணிமுடி பொடிசெய் திலங்கைபாழ் படுப்பதற் கெண்ணி,

வரிசிலை வளைய அடிசரம் துரந்து மறிகடல் நெறிபட, மலையால்

அரிகுலம் பணிகொண் டலைகட லடைத்தான் அரங்கமா நகரமர்ந் தானே.

 

பதவுரை

சுரி குழல் கனிவாய் திருவினை பிரித்த

சிறந்த கூந்தலையும் கொவ்வைக்கனிபோன்ற அதரத்தையும் உடையளான பிராட்டியை வேறுபடுத்தின

கொடுமையில் கடுவிசை அரக்கன்

கொடுமையில் பெரிய வேகத்தையுடையனான இராவணனுடைய

எரி விழித்து இலங்கு மணிமுடி பொடி செய்து

அக்நிபோன்று விளங்கின மணிகளழுத்தின கிரீடங்களைப் பொடிபடுத்தி

இலங்கை

லங்காபுரியை

பாழ்படுப்ப

பாழாக்கி விடவேணுமென்று ஸங்கல்பித்து

(கடலைக் கடக்கவேண்டிக் கடலரசனைநோக்கி)

வரி சிலை வளைய அடு சரம் துரந்து

அழகிய வில்லை வளைத்துக் கொலையம்புகளைப் பிரயோகித்து, (அவ்வளவிலே)

மறி கடல் நெறிபட

அலைமடிகின்ற கடல் வழிபட்டு அமைந்திட

அரி குலம் பணி கொண்டு அலை கடல் மலையால் அடைத்தான்

வாநர ஸமூஹங்கள் கைங்கரியம் செய்யப் பெற்று அலைகடலை மலைகளினால் அணைகட்டின பெருமான்

அரங்கம் மா நகர் அமர்ந்தான்–.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- அரிகுலம் – ‘ஹாரிகுலம்’ என்ற வடசொல் தொடர்விகாரம்.  ஹாரி – குரங்கு.

 

English Translation

The wicked looking Rakshasa, unexcelled in his tyranny, separated the curl-tressed coral-lipped lady Sita from her Lord.  With the intent of destroying Lanka the Lord subdued the ocean with this terrible bow and built a bridge over it with rocks.  He entered the city with an army of monkeys and felled the ten crowned heads of the mighty Ravana.  He is the resident of Arangama-Nagar.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top