(1404)

(1404)

சிந்தனையைத் தவநெறியைத் திருமாலை, பிரியாது

வந்தெனது மனத்திருந்த வடமலையை, வரிவண்டார்

கொந்தணைந்த பொழில்கோவ லுலகளப்பா னடிநிமிர்த்த

அந்தணனை, யான்கண்ட தணிநீர்த்தென் னரங்கத்தே,

 

பதவுரை

சிந்தனையை

(எனது) மனோரதத்திற்கு விஷயமான விதமும்

தவம் நெறியை

உபாயமார்க்கமா யிருப்பவனும்

திரு மாலை

திருமகள் தொழுதனம்

வடமலையை

திருவேங்கடமலைக்கு நிர்வாஹதனும்

(அப்படியிருந்தும் அவ்விடத்தை விட்டு)

வந்து

எழுந்தருளி

எனது மனத்து

என்னுடைய நெஞ்சிலே

பிரியாது இருந்த

ஒரு நொடிப்பொழுதும் விட்டுப்பிரியாமல் எழுந்தருளியிருப்பவனும்,

வரி வண்டு ஆர்

அழகிய வண்டுகள் படிந்த

கொந்து

பூங்கொத்துக்கள்

அணைந்த

நெருங்கியிருக்கப்பெற்ற

பொழில்

சோலைகளையுடைத்தான

கோவல்

திருக்கோவலூரில்

உலகு அளப்பான் அடி நிமிர்த்த அந்தணனை

உலகங்களை அளப்பதற்குகாகத் திருவடிகளை நீட்டின ஸ்வாமியாக ஸேவை ஸாதிப்பவனுமான பெருமானை

யான கண்டது அணி நீர் தென் அரங்கத்தே–.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- சிந்தனையை = “ஒழிவில்காலமெல்லா முடனாய்மன்னி வழுவிலா வடிமை செய்ய வேண்டுநாம்” என்றாற்போலே உண்டாகிற கைங்கரிய மனோரதங்களுக்கு இலக்கானவன் எம்பெருமானிறே. தவநெறியை = மநோரதித்தபடியே கைங்கர்ய ஸாம்ராஜ்யத்தைப் பெறுவிக்கும் உபாயபூதனும்தானே என்கை.  கஜேந்திராழ்வான் கமலபுஸ்பார்ச்சகையாகிற கைங்கரியத்தைப் பண்ணப் பாரித்தும் அவனுடைய முயற்சி பயன்படவில்லையே; எம்பெருமானேயன்றோ பிரதிபந்தகநிவ்ருத்தியைச்செய்து கைங்கரியத்தை நிறைவேற்றுவித்துக்கொண்டான்.  ஆகையாலே உபாயமும் அவனே யென்கிறது.

அந்தணன் – அழகிய தண்மை பொருந்தியவன்; பரமதயாளு என்றபடி…

 

English Translation

The source of thought, the path of penance, the Lord of Sri, the resident of Northern Venkatam hills, the stealer of my heart-space, the Earth-straddling Vedic Student, the Lord of bee-humming  fragrant groved Tirukkovolour, -I have seen him in Southern Arangam amid cool waters.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top