(1400)
ஏனாகி யுலகிடந்தன் றிருநிலனும் பெருவிசும்பும்,
தானாய பெருமானைத் தன்னடியார் மனத்தென்றும்
தேனாகி யமுதாகித் திகழ்ந்தானை, மகிழ்ந்தொருகால்
ஆனாயன் ஆனானைக் கண்டதுதென் னரங்கத்தே,
பதவுரை
|
அன்று |
– |
வராஹகல்பத்தின் தொடக்கத்தில் |
|
ஏன் ஆகி உலகு இடந்து |
– |
மஹாவராஹரூபியாய்த் திருவவதரித்துப் பூமியை (அண்டபித்தியில் நின்றும் குத்தியெடுத்துக் கொணர்ந்தவனும்) |
|
இரு நிலனும் பெரு விசும்பும் தான் ஆய பெருமானை |
– |
விசாலமான மண்ணுலகமும் பரந்த விண்ணுலகமும் தனக்கு உடலாக இருக்கப்பெற்ற ஸ்வாமியாயும், |
|
தன் அடியார் மனத்து |
– |
தன் அடியவர்களது நெஞ்சிலே |
|
என்றும் தேன் ஆகி அமுது ஆகி திகழ்ந்தானை |
– |
எப்போதும் தேன்போலவும் அமிருதம் போலவும் விளங்குமவனாயும், |
|
ஒருகால் |
– |
முன்பொருகாலத்திலே |
|
மகிழ்ந்து |
– |
திருவுள்ள முவந்து |
|
ஆன் ஆயன் ஆனானை |
– |
பசுக்களை மேய்க்குமிடையனாய்ப் பிறந்தவனாயுமுள்ள எம்பெருமானை |
|
கண்டது தென் அரங்கத்தே–. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- பூமியை ஹிரண்யாக்ஷனென்னு மசுரன் பாயாகச் சுருட்டிக் கவர்ந்துபோனதும் ஒன்றுண்டு; பிரளய வெள்ளம் கொள்ளை கொண்டுபோனதும் ஒன்றுண்டு, பிந்திய வரலாறே பெரும்பாலும் ஆழ்வார்கள் அநுஸந்திப்பதாம். மேல் எட்டாம் பத்தில் “பாராரளவும் முது முந்நீர்ப்பரந்த காலம் வளைமருப்பில், ஏராரூருவத்தேன மாயெடுத்த வாற்றலம்மானை” (8-8-3). என்ற பாசுரத்தினால் இது விளங்கும்.
English Translation
The Lord who came as a boar and took the Earth and sky as his, the Lord who is always sweet-as-ambrosia to his devotees, the Lord who grazed cows heartily in the yore, -I have seen him in Southern Arangam amid cool waters.
