(1410)
மன்னுமா நிலனும் மலைகளும் கடலும் வானமும் தானவ ருலகும்,
துன்னுமா யிருளாய்த் துலங்கொளி சுருங்கித் தொல்லைநான் மறைகளும் மறைய,
பின்னும்வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கிப் பிறங்கிருள் நிறங்கெட, ஒருநாள்
அன்னமாய் அன்றங் கருமறை பயந்தான் அரங்கமா நகரமர்ந் தானே,
பதவுரை
|
மன்னு மா நிலனும் |
– |
ஸ்தாவரமான பெரிய பூமியும் |
|
மலைகளும் |
– |
மலைகளும் |
|
கடலும் |
– |
ஸமுத்ரங்களும் |
|
வானமும் |
– |
ஆகாசமும் |
|
தானவர் உலகும் |
– |
அசுரர்களினிருப்பிடமும் (ஆகிய இவையெல்லாம்) |
|
துன்னு மா இருள் ஆய் |
– |
நெருங்கிய போரிருள் மூடப்பெற்றவனாய் |
|
துலங்க ஒளி சுருங்கி |
– |
விளங்கும் பிரகாசம் மழுங்கி |
|
தொல்லை நால் மறைகளும் மறை |
– |
பழைய நால்வேதங்களும் மறைந்துபோக, |
|
பின்னும் |
– |
மீண்டும் |
|
வானவர்க்கும் |
– |
தேவர்களுக்கும் |
|
முனிவர்க்கும் |
– |
ரிஷிகளுக்கும் |
|
நல்கி |
– |
அருள்கூர்ந்து |
|
பிறங்கு இருள் நிறம் கெட |
– |
நிபிடமான இருள் நீங்கும்படியாக |
|
அன்று ஒருநாள் அங்கு; |
||
|
அரு மறை பயந்தான் |
– |
அரிய வேதங்களை உபகரித்தருளினவன் |
|
அரங்கம் மா நகர் அமர்ந்தான்; |
||
English Translation
When the wide Earth, the mountains, the oceans, and the sky, fell to the world of Asuras, and the four Vedas were engulfed in darkness, the Lord appeared as a swan and brightened the world, revealing to the gods and seers the Vedas once again, He is the resident of Arangama-Nagar.
