(1369)

(1369)

வசையில் நான்மறை கெடுத்தவம் மலரயற் கருளி,முன் பரிமுகமாய்,

இசைகொள் வேதநூ லென்றிவை பயந்தவ னே எனக் கருள்புரியே,

உயர்கொள் மாதவிப் போதொடு லாவிய மாருதம் வீதியின்வாய்,

திசையெல் லாம்கம ழும்பொழில் சூழ்திரு வெள்ளறை நின்றானே!

 

பதவுரை

உயர்கொள் மாதவி போ தொழு உலாவிய மாருதம்

ஓங்கிவளர்கின்ற குருக்கத்தி மரங்களிலுள்ள புஷ்பங்களோடே அணைந்த காற்றானது

வீதியின் வாய்

வீதிகள்தோறும் (வீசும்போது)

திசை எல்லாம் கமழும்

திக்குக்களெல்லாம் பரிமளம் பரவப்பெற்றதும்

பொழில் சூழ்

சோலைகள் சூழ்ந்திருக்கப்பெற்றதுமான

திரு வெள்ளறை, நின்றானே!;

முன்

முன்பொருகால்,

வசை இல் நால் மறை கெடுத்த

குற்றமற்ற நான்கு வேதங்களையும் போக்கடித்துக் கொண்டு வருந்திநின்ற

அ மலர் அயர்கு

மலாரில் தோன்றின அப்பிரமனுக்கு

அருளி

அருள்புரிந்து

பரி முகம் ஆய்

ஹயக்ரிவாவதாரமெடுத்து

இசை கொள் வேத நூல் இவை என்று

“ஸ்வரப்ரதானமான வேத சாஸ்த்ரங்கள் இவைகாண்” என்று சொல்லி

பயந்தவனே

அவற்றை அவனுக்கு உபதேசித்துத் தந்தவனே!

எனக்கு அருள்புரி

என் மீது கிருபை பண்ண வேணும்

 

English Translation

O Lord residing in Tiruvellarai, where Madavi bowers grow fall with flowers whose fragrance is carried by the breeze through the streets in all directions!  Then in the yore, you came as a horse-face Hayagriva and gave to that flower-born Brahma the Vedic chants he had lost to the Asuras! Pray grace me.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top