(1379)
வையமுண் டாலிலை மேவு மாயன்மணி நீண்முடி,
பைகொள் நாகத் தணையான் பயிலுமிட மென்பரால்,
தையல் நல்லார் குழல்மா லையும்மற்றவர் தடமுலை,
செய்ய சாந்தும் கலந்திழி புனல்சூழ்தென் னரங்கமே!
பதவுரை
|
நல் தையலார் குழல் மாலையும் |
– |
நல்ல ஸ்த்ரீகளினுடைய தலையிலணிந்த பூமாலைகளும் |
|
மற்று அவர் தடமுலை செய்ய சாந்தும் |
– |
இன்னமும் அந்த ஸ்த்ரீகளினுடைய முலைத்தடங்களில் (பூசப்பட்ட) சிவந்த சந்தனமும் (ஆகிய இவற்றோடு) |
|
கலந்து இழி புனல் சூழ் |
– |
சேர்ந்து கலங்கிப் பிரவஹிக்கின்ற (காவிரித்) தீர்த்தத்தினால் சூழப்பட்ட |
|
தென் அரங்கம் |
– |
திருவரங்கம், |
|
வையம் உண்டு ஆல் இலை மேவும் மாயன் |
– |
(பிரளயத்தில்) பூமியை யெல்லாம் அமுது செய்து ஆலந்தளிரிலே பொருந்திக் கண்வளர்கின்ற ஆச்சர்ய சக்தியுக்தனும், |
|
மணி நீள் முடி |
– |
மணிமயமான நீண்ட கிரீடமணிந்தவனும் |
|
பை கொள் நாகத்து அணையான் |
– |
படங்கொண்ட திருவனந்தாழ்வானைப் படுக்கையாகவுடையனுமான பெருமான் |
|
பயிலும் இடம் என்பர் |
– |
நித்யவாஸம் பண்ணுகிற இடமென்று சொல்லுவர் |
English Translation
Oh, they say the Southern Arangam, -surrounded by swiftly flowing waters that carry the flowers from the coiffure and red Sandal from the breasts of beautiful dames, -in the abode of the wonder-Lord who swallowed the Universe and lay on a fig leaf, the Lord who wears a fall crown and reclines on a hooded serpent.
