(1359)

(1359)

செறும்திண் திமிலே றுடைய, பின்னை

பெறும்தண் கோலம் பெற்றா ரூர்ப்போல்,

நறுந்தண் தீம்தே னுண்ட வண்டு,

குறிஞ்சி பாடும் கூட லூரே!

 

பதவுரை

செறும் திண்திமில் ஏறு

மேல் விழுவனவாய் திடமான முசுப்புக்களையுடையனவான ரிஷபங்கள்

உடைய

பங்கமடைய,

பின்னை பெறு தண் கோலம்

நப்பின்னைப் பிராட்டியினுடைய பெறுதற்கு விரும்பத்தகுந்ததான அழகிய திருமேனியை

பெற்றார்

(ஏறுதழுவி) மணஞ் செய்து கொண்ட பெருமானுடைய

ஊர்

திவ்யதேசம் (எதுவென்றால்)

நறு தண் தீம் தேன் உண்ட வண்டு

மணம்மிக்கதாய் குளிர்ந்ததாய் இனிமையான தேனைப் பருகின வண்டுகள்

குறிஞ்சி பாடும்

குறிஞ்சிப் பண்ணைப்பாடப் பெற்ற

கூடலூர்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஏறு உடைய பின்னை = ரிஷபங்களை யுடையளான நப்பின்னை என்றதாகக் கொண்டு, ரிஷபங்களின் வலியடக்குதலைத் தனக்கு சுல்கமாகவுடைய நப்பின்னை என்னவுமாம்.

கோலம் – அழகுக்கும் உடம்புக்கும் பெயர்.

மூன்றாமடியில் ‘தண்டீன்’ என்று பலரும் ஓதுவது பொருந்தாது. ‘தண்டீம்’ என்றே ஓதுக.  தண் + தீம், தண்டீம்.  தீம் – இனிமை

 

English Translation

Krishna received the beautiful Nappinnal as a prize for his subduring the seven bulls in a fight, He resides in Kudalur where bees drink fragrant nectar and sing kurinji panns.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top