(1374)
ஆறி னோடொரு நான்குடை நெடுமுடி அரக்கன்றன் சிரமெல்லாம்,
வேறு வேறுக வில்லது வளைத்தவ னேஎனக் கருள்புரியே,
மாறில் சோதிய மரதகப் பாசடைத் தாமரை மலர்வார்ந்த,
தேறல் மாந்திவண் டின்னிசை முரல திருவெள்ளறை நின்றானே!
பதவுரை
|
மாறு இல் சோதிய |
– |
ஒப்பற்ற ஒளியை யுடையனவாய் |
|
மரதகம் பாசு அடை |
– |
மரதகம் போன்ற பச்சிலைகளை யுடையனவான |
|
தாமரை |
– |
தாமரைகளினுடைய |
|
மலர் |
– |
பூக்களில் நின்றும் |
|
வார்ந்த தேறல் |
– |
பெருகின மகரந்தத்தை |
|
மாந்தி |
– |
பானம் பண்ணி |
|
வண்டு |
– |
வண்டுகள் |
|
இன் இசை முரல் |
– |
இனிய பண்களைப் பாடா நிற்கப்பெற்ற |
|
திருவெள்ளறை, நின்றானே!; |
||
|
அரக்கன் தன் |
– |
இராவணனுடைய |
|
நெடு முடி உடை |
– |
நீண்ட கிரீடங்களை யணிந்த |
|
ஆறினோடு ஒரு நான்கு சிரம் எல்லாம் |
– |
பத்துத்தலைகளும் ஒன்று தப்பாமல் |
|
வேறு வேறு உக |
– |
தனித்தனியே அற்று விழும்படி |
|
வில் அது வளைத்தவனே |
– |
சார்ங்கத்தை வளைத்து அம்பெய்த பெருமானே!, |
|
எனக்கு அருள்புரி |
– |
என்விஷயத்தில் கிருபை பண்ணு |
English Translation
O Lord residing in Tiruvellarai, where bumble bees drink the nectar from lotuses blossoming in the green lakes of unfading emerald hue, then sit and sing sweetly. Then in the yore you came as a bow-wielder and felled the ten heads of the demon-kin. Pray grace me!
