(1384)
கஞ்சன் நெஞ்சும் கடுமல் லரும்சகடமுங்காலினால்,
துஞ்ச வென்ற சுடராழி யான்வாழுமிட மென்பரால்,
மஞ்சு சேர்மா ளிகைநீ டகில்புகையும், மறையோர்
செஞ்சொல் வேள்விப் புகையும் கமழும்தென் னரங்கமே,
பதவுரை
|
மஞ்சு சேர் மாளிகை நீடு அகில் புகையும் |
– |
மேகமண்டலத்தை அளாவியிருக்கிற மாளிகைகளிலுண்டான அதிகமான அகிற்புகையும் |
|
மா மறையோர் செம் சொல் வேள்வி புயையும் கமழும் |
– |
சிறந்த வைதிக ப்ராமணர்கள் வேதங்களிற் விதிப்படியே நடத்துகிற யாகங்களிலுண்டான ஹோமதூமமும் (சேர்ந்து) பரிமளிக்கப்பெற்ற |
|
தென் அரங்கம் |
– |
திருவரங்கமானது, – |
|
கஞ்சன் நெஞ்சும் கடு மல்லரும் சகடமும் துஞ்ச |
– |
கம்ஸனுடைய மனமும் கடிய மல்லர்களும் சகடாஸுரனும் தொலையும்படி |
|
காலினால் வென்ற |
– |
திருவடியாலே வென்றொழித்த உஜ்வலமான திருவாழியையுடைய பெருமான் ரித்யவாஸம் பண்ணுமிடம் என்று சொல்லுவார்கள் |
English Translation
Oh, they say the Southern Arnagam, -surrounded by mansions that touch the clouds, where the fragrance of Agli smoke and the fire altar of Vedic seers fills the sky, -is the abode of the discus-wielding Lord who destroyed. Kamsa, the rough wrestlers, and the bedevilled cart with his foot.
