(1364)

(1364)

கருந்தண் கடலும் மலையு முலகும்,

அருந்தும் அடிகள் அமரு மூர்போல்,

பெருந்தண் முல்லைப் பிள்ளை யோடி,

குருந்தம் தழுவும் கூட லூரே!

 

பதவுரை

கரு தண் கடலும்

கறுத்துக் குளிர்ந்த கடல்களையும்

மலையும்

மலைகளையும்

உலகும்

(மற்றும்) லோகங்களையும்

அருந்தும்

(பிரளயத்தில்) அமுதுசெய்த

அடிகள்

ஸ்வாமி

அமரும் ஊர்

நித்யவாஸம் பண்ணுமிடம்;–

பெரு தண்

பெருத்தும் குளிர்ந்துமிருக்கிற

முல்லைப் பிள்ளை

முல்லைக் கொடி

ஓடி

படர்ந்து

குருந்தம்

குருந்தமரத்தை

தழுவும்

தழுவியிருக்கப்பெற்ற

கூடலூர்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கடல்கள் மலைகள் முதலானவற்றோடு கூடிய லோகங்களை யெல்லாம் பிரளயங்கொள்ளாதபடி திருவயிற்றிலே வைத்து நோக்கின ஸர்வேச்வரன் வாழுமிடம் திருக்கூடலூர்.  முல்லைக்கொடிகள் குருந்த மருத்தை முட்டாக்கிட்டுப் படர்ந்திருக்கின்றனவாம் அங்கு.

 

English Translation

The Lord who took the dark ocean, the mountains and all the worlds resides in Kudolur where the sapling of the cool fragrant Mullai creeper climbs all over the hefty Kurundu tree

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top