(1363)
தக்கன் வேள்வி தகர்த்த தலைவன்,
துக்கம் துடைத்த துணைவ ரூர்போல்,
எக்க லிடுநுண் மணல்மேல், எங்கும்
கொக்கின் பழம்வீழ் கூட லூரே!
பதவுரை
|
தக்கன் வேள்ளி தகர்த்த தலைவன் |
– |
தக்ஷப்ரஜாபதியினுடைய யாகத்தை அழித்தவனான சிவபிரானுடைய |
|
துக்கம் துடைத்த |
– |
துயரத்தைப் போக்கின |
|
துணைவர் |
– |
ஆபத்பந்துவான பெருமானுடைய |
|
ஊர் |
– |
திவ்யதேசம்; |
|
எக்கல் இடு |
– |
வண்டல்படிந்த |
|
நுண் மணல் மேல் எங்கும் |
– |
நுட்பமான மணல்களுள்ளவிடமெங்கும் |
|
கொக்கின் பழம |
– |
மாம்பழங்கள் |
|
வீழ் |
– |
விழுந்திருக்கப்பெற்ற |
|
கூடலூர் |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- சங்கரன் கொண்ட சாபத்தைத் தீர்த்த பெருமான் வாழுமிடம் திருக்கூடலூர். (எக்கல் இத்யாதி.) வண்டலிட்ட நுண்ணிய மணல்களில் மாம்பழங்கள் விழுந்து வரிசையாகக் கிடக்கிறபடியைப் பார்த்தால் பழுக்கைக்குப் பதித்துவைத்தாற் போன்றுள்ள தென்னலாம்.
English Translation
Siva who destroyed the Daksha-sacrifice found a comforting superior in the Lord, he resides in kudalur where raw Mangos dropping from trees ripen in the cosy sand dunes of the river everywhere.
