(1352)
மையார் தடங்கண் கருங்கூந்தல் ஆய்ச்சி மறைய வைத்ததயிர்,
நெய்யார் பாலோ டமுதுசெய்த நேமி யங்கை மாயனிடம்,
செய்யார் ஆரல் இரைகருதிச் செங்கால் நாரை சென்றணையும்,
பொய்யா நாவில் மறையாளர் புள்ளம் பூதங் குடிதானே!
பதவுரை
|
மை ஆர் தடகண்கரு கூந்தல் ஆய்ச்சி |
– |
மையணிந்த விசாலமான கண்களையுடையவளும் கறுத்த கூந்தலை யுடையவளுமான யசோதைப் பிராட்டி |
|
மறைய வைத்த தயிர் நெய் ஆர் பால் |
– |
கண் படாதபடி மறைத்து வைத்த தயிரையும் நெய்யையும் குடம் நிறைந்த பாலையும் |
|
அமுது செய்த |
– |
(களவு வழியினால்) அமுது செய்த |
|
நேமி அம் கை மாயன் இடம் |
– |
ஸுதர்சநஹஸ்தனான மாயோன் எழுந்தருளியிருக்குமிடமாவது;- |
|
செம் கால் நாரை |
– |
சிவந்த கால்களையுடைய நாரைகள் |
|
செய் ஆர் |
– |
கழனிகளில் நிறைந்திருக்கிற |
|
ஆரல் |
– |
ஆரல் மீன்களை |
|
இரை கருதி |
– |
ஆஹாரமாகக் கொள்ள நினைத்து |
|
சென்று அணையும் |
– |
(அங்கே) சென்று சேரப்பெற்றதும் |
|
பொய்யா நாவில் மறை ஆளர் |
– |
பொய்சொல்லி யறியாத நாக்கிலே வேதங்களைத் தாங்குமவரான அந்தணர் வாழப்பெற்றதுமான) |
|
புள்ளம் பூதங்குடி |
||
English Translation
The black collyrium-eyed dark haired cowhered-dame yasoda hid the milk, curds and Ghee, but the resplendent discus-bearing wonder-Lord found and ate it all. He resides amid lakes, -where auspicious-red-footed storks stand waiting for transparent Aral-fish, and where clear thinking Vedic seers seek the hidden truth of the Vedas, -in Pullam-Budangudi, yest, always!
