(1472)

(1472)

மற்றோர் தெய்வமெண்ணே னுன்னையென் மனத்துவைத்துப் பெற்றேன்,

பெற்றதுவும் பிறவாமை யெம்பெருமான்,

வற்றா நீள்கடல்சூ ழிலங்கையி ராவணனைச்

செற்றாய், கொற்றவனே. திருவிண் ணகரானே

பதவுரை

வற்றா நீள் கடல் சூழ்

ஒருநாளும் வற்றாத பெரியகடலால் சூழப்பட்ட
இலங்கை

லங்காபுரியில்
இராவணனை

ராவணனை
செற்றாய்

கொன்றொழித்தவனே!,
கொற்றவனே

தேவாதிதேவனே!
திருவிண்ணகரானே!-

மற்று ஓர் தெய்வம் எண்ணேன்

வேறொரு தெய்வத்தை நெஞ்சிலும் நினைப்பேனல்லேன்;
எம்பெருமான்

ஸ்வாமிந்!
உன்னை

உன்னை
என் மனத்து வைத்து

எனது நெஞ்சில் இருத்தி
பெற்றேன்

ஒரு பேறுபெற்றேன்;
பெற்றதுவும்

அப்படி நான் பெற்ற பேறாவது
பிறவாமை

இனிப் பிறப்பில்லாமையே.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஒருவராலும் அழிக்கவொண்ணாத அரணையுடைத்தான இலங்கையை நீறுபடுத்தி இராவணனையும் வேரோடே களைந்தொழித்தாப்போலே அடியேனுடைய பிரதிபந்தகங்களையெல்லாம் தொலைத்தருளின பெருமானே! நான் ஆச்ரயிக்கத்தகுந்த தெய்வம் வேறொன்று இருப்பதாக நெஞ்சிலும் நினையேன்; ஸர்வஸ்மாத்பரனானவுன்னையே நெஞ்சில் தாங்கி அலப்யலாபம் பெற்றேன்;  என்ன பேறுபெற்றேனென்னில், தேவதாந்தரங்களை ஆச்ரயிப்பதற்கு ஒருகால் காரணமாகக்கூடிய ஜன்மமும் தொலையப்பெற்றேன்; திருவிண்ணகரிற் கண்ட காட்சியிலே பெற்ற பேறுகாண் இது.

English Translation

O Lord of Tiruvinnagar! O Lord who destroyed the ocean-girdled Lanka city’s king Ravana!  My Liege!  I seek no other god.  I have placed you firmly in my heart, in doing so, I have found my freedom from birth.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top