(1462)
பாண்டேன் வண்டறை யும்குழ லார்கள்பல் லாண்டிசைப்ப,
ஆண்டார் வையமெல் லாம் அர சாகி, முன்னாண்டவரே
மாண்டா ரென்றுவந் தார்அந் தோமனை வாழ்க்கைதன்னை வேண்டேன்,
நின்னடைந் தேன்திரு விண்ணகர் மேயவனே.
பதவுரை
|
பாண் |
– |
இசைப்பாட்டையுடையனவாய் |
|
தேன் |
– |
தேனைப் பருகுகின்ற |
|
வண்டு |
– |
வண்டுகள் |
|
அறையும் |
– |
ரீங்காரம் செய்யப்பெற்ற |
|
குழலார்கள் |
– |
கூந்தலையுடையரான மாதர்கள் |
|
பல்லாண்டு இசைப்ப |
– |
மங்களாசாஸணம் பண்ண |
|
அரசு ஆகி |
– |
அரசர்களாயிருந்து கொண்டு |
|
வையம் எல்லாம் |
– |
பூமண்டலம் முழுவதையும் |
|
ஆண்டார் |
– |
ஆட்சிபுரிந்தார்கள், |
|
முன் ஆண்டவரே மாண்டார் |
– |
(இப்படி) முன்பு ஆண்டு வந்த அவர்களே மாண்டு போனார்கள், |
|
என்று வந்தார் |
– |
என்ற சொல்லுக்கு இலக்காய்க்கொண்டு வருகிறார்கள்; |
|
அந்தோ |
– |
ஐயோ! |
|
திரு விண்ணகர் மேயவனே!-; |
||
|
மனை வாழ்க்கை தன்னை வேண்டேன் |
– |
(இப்படி நிலையற்றதான) ஸம்ஸாரவாழ்க்கையை வெறுத்தவனாய்க்கொண்டு |
|
நின் அடைந்தேன் |
– |
உன்னைப் பற்றினேன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ப்ராக்ருதமான செல்வம் நிலைநிற்கமாட்டாதாகையாலும், கைங்கர்யமாகிற அப்ராக்ருத செல்வமே நிலைநிற்பதாகையாலும் இம்மைச் செல்வத்தை வெறுத்து மறுமைச்செல்வத்தை விரும்பி உன்னடி பணிந்தேனென்கிறார். “கண்டார்வணங்கக் களியானைமீதே கடல் சூழுலகுக்கொரு காவலராய் விண்டோய் நெடு வெண்குடை நீழலின் கீழ் விரிநீருலகாண்ட” என்றாப்போல நிலமுழுது மாளுமரசர்களைச் சுற்றி வண்டார் பூங்குழல்மாதர் பலரிருந்து ‘இச்செல்வம் மாறாதே நிலை நிற்கவேணும்’ என்று பல்லாண்டுபாடுவார்களாம், அதனைச் சொல்லுகிறது முதலடி.
அரசாகி வையமெல்லாம் ஆண்டார் முன்னான்டவரே மாண்டாரென்று வந்தார் = இதுவரையில் நீர்க்குமிழிபோலேயிருந்து கழிந்த அரசர்கள் பல்லாயிரம் பேர்களுண்டு; ஆள்பவர் ஆண்டுகொண்டே யிருக்கின்றனரென்பதில்லை. இப்போது ஆள்பவர் முன்பு ஆண்டு மாண்டவருடைய கணக்கிலே பதிவுபெறுகின்றனரென்றவாறு. திருவாய்மொழியில் “சொன்னால் விரோதம்” (3-9-1.) என்னுந் திருவாய்மொழியின் ஈடுமுப்பதாறாயிரப்படி ப்ரவேசத்தில் இப்பாசுரத்தை உதாஹரித்துப் பரமரஸமாக அருளிச்செய்துள்ள ஸ்ரீஸூக்திகள் ஸேவிக்கத்தக்கன.
இவ்வுலகத்துப் போகங்கள் இப்படிப்பட்டனவாதலால் இவ்வுலகவாழ்வில் வெறுப்புற்று நித்யைச்வர்யம் பெறுவதாக நின்னடைந்தேனென்றாராயிற்று.
English Translation
O Lord residing in Tiruvinnagar! With fragrant bee-humming nectar-coiffured dames singing their glory, they who had ruled the Earth once are now dead and gone. Alas! I have no desire for worldly life anymore. I have come to your feet.
