(1442)

(1442)

மூளவெரி சிந்திமுனி வெய்தியமர் செய்துமென வந்த அசுரர்,

தோளுமவர் தாளுமுடி யோடுபொடி யாகநொடி யாம ளவெய்தான்,

வாளும்வரி வில்லும்வளை யாழிகதை சங்கமிவை யங்கை யுடையான்,

நாளுமுறை கின்றநகர் நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே,

 

பதவுரை

மூள எரி சிந்தி

(கண்டவிடமெங்கும்) புகையும்படியாக நெருப்புகளைக் கொட்டி

அமர்செய்தும் என வந்த அசுரர் அவர்

‘யுத்தம் செய்வோம்’ என்று வந்த அசுரர்களினுடைய

தோளும் தாளும் முடியோடு

தோள்களும் கால்களும் தலைகளும்

பொடி ஆக

பொடிபொடியாம்படி

நொடி ஆம் அளவு

ஒருநொடிப் பொழுதில்

எய்தான்

அம்புகளைச் செலுத்தினவனும்

வாளும் வரி வில்லும் வளை ஆழி கதை சங்கம் இவை அம் கை உடையான்

நந்தகவாள், அழகியசார்ங்கம், மண்டலாகாரமான ஸுதர்சநம், கௌமோதகி, பாஞ்சஜந்யம் ஆகிய இப்பஞ்சாயுதங்களை அழகிய திருக்கையில் ஏந்தியுள்ள வனுமான பெருமான்

நாளும்

எப்போதும்

உறைகின்ற நகர்

எழுந்தருளியிருக்குந் திருப்பதியான

நந்திபுரவிண்ணகரம், மனமே! நண்ணு–.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- அசுரர்கள் போர்க்குவரும்போது கண்டவிடமெங்கும் நெருப்புகளை வாரிக்கொட்டுவதும் கோபாவேசங்கொண்டு கோலாஹலங்கள் பண்ணுவதும் வழக்கம்; அங்ஙனம் வருமசுரர்களின் தோளுந் தாளுந் தலையும் ஒருநொடிப் பொழுதில் பொடிபட்டொழியும்படி அம்புகளைச் செலுத்தி வெற்றிபெற்ற பெருமான் இன்னமும் அப்படிப்பட்ட ஆஸுரப்ரக்ருதிகளை யழிப்பதற்காகப் பஞ்சாபுதங்களையும் உடன்கொண்டவனாகி நந்திபுர விண்ணசரத்திலே நித்யவாஸம் பண்ணுகிறானென்க.

 

English Translation

Came to the war again raging like fire and smoke clannish Asuras with flashing teeth, He bore a conch and a discus that shone with the light of a thousand one blazing suns, mace and a dagger and bow and arrow that did cut the Asuras to pieces and mince. Bow to the Lord of the Nagar-Nandipura Vinnagaram our destination.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top