(1320)
அண்டர் கோனென் னானையென்றும் ஆயர் மாதர் கொங்கைபுல்கு
செண்ட னென்றும், நான்மறைகள் தேடி யோடும் செல்வனென்றும்,
வண்டு லவுபொழில் கொள்நாங்கை மன்னு மாய னென்றென்றோதி,
பண்டு போலன் றென்மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே.
பதவுரை
|
என் மடந்தை பண்டு போல் அன்று |
– |
என் பெண்ணானவள் (இப்போது) முன்போலல்ல; (என்ன செய்கின்றாளென்னில்;) |
|
அண்டர் கோன் (என்றும்) |
– |
பிரமாண்டத்திலுள்ளா ரெல்லார்க்கும் ஸ்வாமியென்று சொல்லிக்கொண்டும் |
|
என் ஆனை என்றும் |
– |
எனக்கு ஆனை போன்றவன் என்று சொல்லிக்கொண்டும் |
|
ஆயர் மாதர் கொங்கை புல்கு செண்டன் எனறும் |
– |
இடைப்பெண்களுடைய முலைகளோடே அணையும் இயல்வுடையவனென்று சொல்லிக்கொண்டும் |
|
நால் மறைகள் தேடி ஓடும் செல்வன் என்றும் |
– |
நான்கு வேதங்களும் தேடிக்கொண்டுபின் தொடரப் பெற்ற ஸ்ரீமான் என்று சொல்லிக்கொண்டும் |
|
வண்டு உலவு பொழில் கொள் நாங்கை மன்னு |
– |
வண்டுகள் உலவுகின்ற சோலைகளையுடைய திருநாங்கூரில் நித்யவாஸம் பண்ணுகிற |
|
மாயன் என்று என்று ஓதி |
– |
ஆச்சர்யபூதன் என்று பலகால் சொல்லிக் கொண்டும் |
|
பார்த்தன் பள்ளி பாடுவாள் |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ‘அன்டர்’ என்று தேவர்களுக்கும் இடையர்க்கும் பெயர். அண்டத்துக்குட்பட்டா ரெல்லாரையுஞ் சொல்லும். இரட்டுற மொழிதலால் – இடையர்கட்குத்தலைவன், தேவர் கட்குத்தலைவன் என்ற இரண்டு பொருளையுங்கொண்டு, ஸௌலப்யத்திலும் பரத்வத்திலும் எல்லை காணமுடியாதவன் என்பதாகக் கொள்ளலாம்.
ஆயர் மாதர் கொங்கைபுல்கு செண்டன் – அவனிடத்தில் நான் இவ்வளவு காதல் கொண்டிருக்கச் செய்தேயும் இடைச்சிகளோடு புணருவதிலேயே அவனுக்கு நோக்கமென்று பிரணய ரோஷந்தோற்றச் சொல்லுகின்றாளென்க. ‘செண்டு’ என்று ஸ்வபரவத்துக்கும்பெயர்.
நான்மறைகள் தேடியோடுஞ் செல்வன் – வேதங்களெல்லாம் அவனுடைய பெருமைகளை எல்லை கண்டு சொல்லி முடித்துவிடவேணுமென்று முயன்றும் “யதோவாசோ நிவர்த்தந்தே, அப்ராப்யமநஸா ஸஹ” என்கிறபடியே அவனைப் பின்தொடர்ந்தோடி இளைத்து மீள்வனவாதலால் அவற்றுக்குப் பிடிகொடாமல் அபரிச்சிந்ந் வைபவனாயிருப்பவன்.
பண்டுபோலன்று – நேற்றுவரையில் மற்ற உலகத்துப் பெண்களைப்போலே பந்தம் அம்மானையும் பாவையும் பைங்கிளியுங்கொண்டு போதுபோக்கிக்கிடந்த இவள் இன்று இப்படி விகாரப்பட்டுப் பார்த்தன் பள்ளி பாடத் தொடங்கி விட்டாள் என்கிறாள். அன்றியே, இதற்கு முன்பும் இவள் பார்த்தன்பள்ளி பாடினவளே யாகிலும் அப்போதெல்லாம் இப்படி அநுராகந்தோற்றப் பாடினாளல்லள்; இப்போதோ விலக்ஷணமாகப் பாடுகின்றாள் என்கிறாளாகவுமாம்.
English Translation
“Lord of Earth, adorable, the elephant-bull among the dames!” “Lord who runs amuck to hear the chanting of the Vedas four!” “Bees in groves abound in Nangai, -ancient place of worship, his!” She’s now no more like the old, my daughter sings of Parttan-Palli, O!
