(1431)
ஊனமர் தலையொன் றேந்தி உலகெலாம் திரியு மீசன்
ஈனமர் சாபம் நீக்காய், என்னவொண் புனலை யீந்தான்,
தேனமர் பொழில்கள் சூழ்ந்த செறிவயல் தென்தி ருப்பேர்,
வானவர் தலைவன் நாமம் வாழ்த்திநா னுய்ந்த வாறே,
பதவுரை
|
ஊன் அமர் தலை ஒன்று |
– |
மாம்ஸம் நிறைந்ததொரு பிரமகபாலத்தை |
|
ஏந்தி |
– |
கையில் தரித்துக்கொண்டு |
|
உலகு எல்லாம் |
– |
எல்லாலோகங்களிலும் |
|
திரியும் |
– |
(பிச்சையெடுத்துத்) திரிந்துகொண்டிருந்த |
|
ஈசன் |
– |
ருத்ரனானவன் |
|
ஈன் அமர் சாபம் நீக்காய் என்ன |
– |
‘தண்மையை விளைவிப்பதான சாபத்தை நீக்கியருள்’ என்று பிரார்த்திக்க |
|
ஒண் புனலை |
– |
அழகிய ஸ்வேதஜலத்தை |
|
ஈந்தரன் |
– |
கொடுத் (து அந்த சாபத்தைத் தீர்த்) தவனும். |
|
தேன் அமர் பொழில்கள் சூழ்ந்த |
– |
வண்டுகள் நிறைந்த சோலைகளால் சூழப்பட்டதும் |
|
செறி வயல் |
– |
நெருங்கின கழனிகளையுடையதுமான |
|
தென் திருப்பேர் |
– |
தென் திருப்பேர் நகரில் எழுந்தருளியிருக்கிற |
|
வானவர் தலைவன் |
– |
தேவாதிதேவனுமான பெருமானுடைய |
|
நாமம் |
– |
திருநாமங்களை |
|
நான் வாழ்த்தி உய்ந்த ஆறு ஏ–. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ஈனமர்சாபம் – கண்டவர்களடங்கலும் ‘இவன் பிரமஹத்திக்காரன்’ என்று பழிக்கு படியாகவுள்ள பாவம் என்றவாறு. ‘ஹீநம்’ என்ற வடசொல் ‘ஈன்’ எனச்சிதைந்தது.
English Translation
The god Siva, with a skull for a begging bowl, came seeking redemption. The Lord filled his skull-bowl with sap of his heart and freed him from the curse. He resides amid nectared! graves and fertile fields in Ten, Tirupper, How easily have I attained him through chanting his names!
