(1314)
கோலால் நிரைமேய்த்த எங்கோ வலர்கோவே,
நாலா கியவே தியர்மன் னியநாங்கூர்,
சேலார் வயல்சூழ் திருவெள்ளக் குளத்துள்
மாலே, எனவல் வினைதீர்த் தருளாயே.
பதவுரை
|
கோலால் நிரை மேய்த்த |
– |
கோலைக்கொண்டு பசுக்கூட்டங்களை மேய்த்த |
|
எம்கோவலர் கோவே |
– |
எமது கோபால கிருஷ்ணனே! |
|
நாலாகிய வேதியர் மன்னிய நாங்கூர் |
– |
நாலு வேதங்களையும் வல்லவர்கள் நித்யவாஸம் செய்கிற திருநாங்கூரில் |
|
சேல் ஆர் வயல் சூழ் |
– |
மீன்கள் நிறைந்த கழனிகளால் சூழப்பட்ட |
|
திருவெள்ளக்குளத்துள் |
– |
திருவெள்ளக்குளத்தில் எழுந்தருளியிருக்கிற |
|
மாலே |
– |
எம்பெருமானே! |
|
என் வல்வினை தீர்த்தருளாய் |
– |
என்னுடைய கொடிய பாவங்களை போக்கியருள வேணும். |
English Translation
O Lord who came as a cowherd with grazing staff, Residing in Nangur with learned Vedic seers! Lakes and fertile fields, -Tiruvellakulan Lord, Dear to me, pray rid me of Karmic misery.
