(1314)

(1314)

கோலால் நிரைமேய்த்த எங்கோ வலர்கோவே,

நாலா கியவே தியர்மன் னியநாங்கூர்,

சேலார் வயல்சூழ் திருவெள்ளக் குளத்துள்

மாலே, எனவல் வினைதீர்த் தருளாயே.

 

பதவுரை

கோலால் நிரை மேய்த்த

கோலைக்கொண்டு பசுக்கூட்டங்களை மேய்த்த

எம்கோவலர் கோவே

எமது கோபால கிருஷ்ணனே!

நாலாகிய வேதியர் மன்னிய நாங்கூர்

நாலு வேதங்களையும் வல்லவர்கள் நித்யவாஸம் செய்கிற திருநாங்கூரில்

சேல் ஆர் வயல் சூழ்

மீன்கள் நிறைந்த கழனிகளால் சூழப்பட்ட

திருவெள்ளக்குளத்துள்

திருவெள்ளக்குளத்தில் எழுந்தருளியிருக்கிற

மாலே

எம்பெருமானே!

என் வல்வினை தீர்த்தருளாய்

என்னுடைய கொடிய பாவங்களை போக்கியருள வேணும்.

 

English Translation

O Lord who came as a cowherd with grazing staff, Residing in Nangur with learned Vedic seers!  Lakes and fertile fields, -Tiruvellakulan Lord, Dear to me, pray rid me of Karmic misery.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top