(1315)

(1315)

வாரா கமதாகி யிம்மண்ணை யிடந்தாய்,

நாரா யணனே நல்லவே தியர்நாங்கூர்,

சீரார் பொழில்சூழ் திருவெள்ளக் குளத்துள்

ஆரா வமுதே, அடியேற் கருளாயே’

 

பதவுரை

வாராகம் அது ஆகி

மஹாவராஹமாய்த் திருவவதரித்து

இ மண்ணை இடந்தாய்

இப்பூமியை அண்டபித்தியில் நின்றும் ஒட்டுவிடுவித்தெடுத்தவனே!,

நாராயணனே!;

நல்ல வேதியர்

விலக்ஷணரான வைதிகர்கள் வாழ்கிற

நாங்கூர்

திருநாங்கூரில்

சீர் ஆர் பொழில் சூழ்

சிறந்த சோலைகள் சூழ்ந்த

திருவெள்ளக்குளத்துள்;

ஆரா அமுதே

ஒருநாளும் த்ருப்தி பிறவாத அமிருதம் போன்றவனே!

அடியேற்ரு அருளாய்

அடியேன்மீது கிருபை பண்ணு.

 

English Translation

O Lord who came as a boar and lifted the Earth, Residing in Nangur, Namo Narayana!  Exuding flower groves, -Tiruvellakulam Lord!  Ambrosia!  Grace me, – this lowly servant-self.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top