(1266)
இந்து வார்சடை யீசனைப் பயந்தநான் முகனைத்தன் னெழிலாரும்
உந்தி மாமலர் மீமிசைப் படைத்தவன் உகந்தினி துறைகோயில்,
குந்தி வாழையின் கொழுங்கனி கர்ந்துதன் குருளையைத் தழுவிப்போய்,
மந்தி மாம்பணை மேல்வைகு நாங்கூர் வண்புரு டோத்தமமே.
பதவுரை
|
இந்து வார் சடை ஈசனை பயந்த |
– |
சந்திரனோடுகூடி நீண்டிருக்கிற சடைமுடியையுடைய ருத்ரனை ஸ்ருஷ்டித்த |
|
நான் முகனை |
– |
பிரமனை |
|
தன் எழில் ஆரும் உந்திமா மலர்மீமிசை படைத்தவன் |
– |
தன்னுடைய அழகு திருநாபிக் கமலத்திலே பொருந்திய உண்டாக்கின பெருமான் |
|
உகந்து இனிது உறை கோயில்; |
||
|
மந்தி |
– |
பெண் குரங்கானது |
|
குந்தி |
– |
குந்திக்கொண்டு |
|
வாழையின் கொழு கனி நுகர்ந்து தன் குருளையை தழுவி போய் |
– |
நல்ல வாழைப் பழங்களை புஜித்து தன்து குட்டியை அணைத்துக் கொண்டு அங்கு நின்றும்போய் |
|
மாம்பணைமேல் வைகும் நாங்கூர் |
– |
மாமரக் கிளைகளின் மேல் தங்கியிருக்கப் பெற்ற திருநாங்கூரில் |
|
வண்புருடோத்தமம் |
||
English Translation
The crescent-decked mat-haired Siva was created by Brahma-on-a-lotus, who in turn was created by our Lord on his navel. He resides of Nangur, -where monkeys sit and eat bananas from fertile plantation; then take their young ones to their bosom, and go to sleep on the thick branches of the Mango tree, -In the temple of Van-Purushottamam.
