(1265)

(1265)

வாளை யார்தடந் கண்ணுமை பங்கன்வன் சாபமற் றதுநீங்க

மூளை யார்சிரத் தையமுன் அளித்தவெம் முகில்வண்ண னுறைகோயில்

பாளை வான்கமு கூடுயர் தெங்கின்வன் பழம்விழ வெருவிப்போய்

வாளை பாய்தடம் சூழ்தரு நாங்கூர் வண்புரு டோத்தமமே.

 

பதவுரை

வாளை ஆர்தட கண்உமை பங்கன்

மீன்போன்ற விசாலமான கண்களை யுடையளான பார்வதியைத் தன் சரீரத்தின் ஒருபக்கத்தில் உடையனான ருத்ரனுடைய

வல் சாபம் அது நீங்க முன்

வலிய சாபம் தொலையும்படியாக, முன்பொரு காலத்தில்

மூளை ஆர் சிரத்து ஐயம் அளித்த

வெறும் எலும்பான தலையோட்டிலே பிக்ஷையளித்த

எம் முகில் வண்ணன்

நீலமேக நிறத்தனான எம்பெருமான்

பாளை

பாளைகளை யுடைத்தாய்

வான்

ஓங்கியிருந்துள்ள

கமுகு ஊடு

பாக்கு மரங்களினிடையே

உயர்

உயர்ந்திருக்கின்ற

தெங்கின்

தென்னை மரங்களினுடைய

வன் பழம்

பெரிய காய்கள்

விழ

(குளத்தில்) விழ

வாளை வெருவி போய் பாய்

(அங்குள்ள) மீன்கள் அஞ்சி அவ்விடத்தை விட்டுப் போய் வேறிடத்தில் குதித்துச் சேரப்பெற்ற

தடம் சூழ்தரு நாங்கூர்

தடாகங்களினால் சூழப்பட்ட திருநாங்கூரில்

வண்புருடோத்தமம்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பாக்குச் சோலைகளின் நடுவே தென்னைமரங்கள் ஓங்கி வளர்ந்திருக்கின்றன; அவற்றினின்று பெருத்த காய்கள் இற்றுக் குளங்களிலே விழுகின்றன;  அவற்றின் கடுமையான ஓசையைக் கேட்டவாறே மீன்கள் ‘தங்களை இரையாகக் கொள்வதற்கு ஏதோவொன்று வந்து குதித்துவிட்டது’ என்று பிரமித்து வேறிடந்தேடித் துள்ளித் தாவுகின்றனவாம்.  எம்பெருமானிடத்தில் அஸ்தாநே பயசங்கை பண்ணிக் கலங்கும் பரிலர்களின்படிக்குப் போலியென்னலாம்.

 

English Translation

Siva, -who bears his wide eyed Dam Parvati on his one half, -was cursed to carry the skull of Brahma as a begging bow! In this hand.  Out benevolent cloud-hued Lord filled it with the sap-of-his-heart blood and rid him of the curse. He resides at Nangur, -where Areco trees grow fall, with coconut trees in between; the coconut drops from the tree, into the lake where startled the fish jump and dance,  – in the temple of Van-Purushottamam.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top