(1267)
மண்ணு ளார்புகழ் வேதியர் நாங்கூர் வண்புரு டோத்தமத்துள்,
அண்ணல் சேவடிக் கீழடைந் துய்ந்தவன் ஆலிமன் அருள்மாரி,
பண்ணு ளார்தரப் பாடிய பாடலிப் பத்தும்வல் லார்,உலகில்
எண்ணி லாதபே ரின்பமுற் றிமையவ ரோடும் கூடுவரே.
பதவுரை
|
மண்ணுள் ஆர் புகழ் வேதியர் நாங்கூர் |
– |
பூமண்டலத்தில் நிறைந்த புகழையுடைய வைதிகர்கள் வாழ்கிற திருநாங்கூரிலுள்ள |
|
வண்புருடோத்தமத்துள் |
– |
வண்புருடோத்தம மென்னுத் திருப்பதியில் எழுந்தருளியிருக்கிற |
|
அண்ணல் |
– |
ஸ்வாமியினுடைய |
|
சே அடிக்கீழ் அடைந்து உய்ந்தவன் |
– |
திருவடிகளின் கீழே சேர்ந்து உஜ்ஜீவித்தவரும் |
|
ஆலி மன் – |
– |
திருவாலி நாட்டுக்குத் தலைவரும் |
|
அருள் மாரி |
– |
கிருபையை வர்ஷிக்கும்மேகமா -யுள்ளவருமான திருமங்கையாழ்வார் |
|
பண்ணுள் ஆர்தர பாடிய பாடல் இப்பத்தும் வல்லார் |
– |
கானத்திலே பொருந்தும்படி பாடின பாசுரமான இத்திருமொழியை ஓதவல்லவர்கள் |
|
உலகில் எண் இலாத பேர் இன்பம் உற்று |
– |
இவ்வுலகின்கண் அளவற்ற மஹாநந்தங்களை அநுபவித்து (பிறகு) |
|
இமையவரோடும் கூடுவர் |
– |
நித்யஸூரிகளோடும் கூட்டி வாழப் பெறுவர். |
English Translation
World renowned Vedic seers live in Nanguru’s Van-Purushottamam where the benevolent king of Tiruvali offered worship with this garland of sweet Tamil Pann-based songs. Those who master it will live on Earth in great joy and join the celestials as well.
