(1268)
பேரணிந் துலகத் தவர்தொழு தேத்தும் பேரரு ளாளனெம் பிரானை,
வாரணி முலையாள் மலர்மக ளோடு மண்மக ளுமுடன் நிற்ப,
சீரணி மாட நாங்கைநன் னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே,
காரணி மேகம் நின்றதொப் பானைக் கண்டுகொண் டுய்ந்தொழிந் தேனே.
பதவுரை
|
உலகத்தவர் பேர் அணிந்து |
– |
இவ்வுலகிலுள்ளார் அனைவரும் திருநாம ஸங்கீர்த்தனஞ் செய்துகொண்டு |
|
தொழுது ஏத்தும் பேரருளாளன் |
– |
அடிபணிந்து துதிக்கப்பெற்ற பேரருளாளப் பெருமாளாய் |
|
எம்பிரானை |
– |
எமக்கு ஸ்வாமியாய் |
|
கார் அணிமேகம் நின்றது ஒப்பானை |
– |
மழைகாலத்தில் உண்டான அழகிய மேகம் நிற்கிறாப் போலுள்ளவனான பெருமானை |
|
சீர் அணிமாடம் நாங்கை நல்நடுவுள் |
– |
அழகு பொருந்திய மாடங்களையுடைய திருநாங்கூரில் நட்டநடுவிலே |
|
செம்பொன் செய் கோயிலின் உள்ளே |
– |
செம்பொன் செய்கோயில் என்னுந் திருப்பதியிலே, |
|
வார் அணி முலையாள் |
– |
கச்சணிந்த முலையையுடையளான |
|
மலர் மகளோடு |
– |
பெரிய பிராட்டியும் |
|
மண் மகளும் |
– |
பூமிப்பிராட்டியும் |
|
உடன் நிற்ப |
– |
கூடியிருக்க |
|
கண்டு கொண்டு ஸேவித்து |
||
|
உய்ந்தொழிந்தேன் |
– |
உஜ்ஜீவித்துப்போனேன் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- பிராட்டிக்கு ‘வாரணிமுலையாள்’ என்று இட்ட விசேஷணம் அவளுடைய நித்யயௌவனத்தைக் காட்டுதற்கென்க.
நாங்கைநன்னடுவுள் – ‘செம்பொன்செய்கோயில்’ என்னுந் திருப்பதி திருநாங்கூரில் நட்டநடுவில் உள்ளது; இவ்வாழ்வார்தாமும் இத்திருப்பதியின் மங்களாசரஸநபரமான இத்திருமொழியைத் திருநாங்கூர்ப்பதிகங்கள் பதினொன்றின் நன்னடுவே அமைத்தருளின அழகும் ஆராயத்தக்கது. “நந்தாவிளக்கே” என்று தொடங்கி “கவளயானை கொம்பொசித்த” என்ற திருமொழியளவாகப் பதினொரு திருமொழிகள் திருநாங்கூர்த் திருப்பதிகளைக் கவிபாடுவன; அவற்றுள் கீழே ஐந்து திருமொழிகள் சென்றன; மேலே ஐந்து திருமொழிகளுள்ளன; இத்திருமொழி நன்னடுவே உள்ளது எனக்காண்க.
English Translation
The world comes, to worship in tumultuous multitudes, my benevolent Lord Per-Arulalan, with corsetted-breast dame, sitting on a lotus, and Dame of-the-Earth by the side of him. Splendorous mansions all around Nangur, -Semponsel Koyil is amid them. Dark as the rain cloud, seeing the good Lord, I have found my spiritual elevation.
