(1260)
அண்ட ரானவர் வானவர் கோனுக்கென் றமைத்தசோ றதுவெல்லாம்
உண்டு, கோநிரை மேய்த்தவை காத்தவன் உகந்தினி துறைகோயில்,
கொண்ட லார்முழ வில்குளிர் வார்பொழில் குலமயில் நடமாட,
வண்டு தானிசை பாடிடு நாங்கூர் வண்புரு டோத்தமமே.
பதவுரை
|
அண்டர் ஆனவர் வானவர் கோனுக்கு என்று அமைத்த சோறு அது எல்லாம் |
– |
இடையர்கள் தேவேந்திரனுக்குப் பலியிட வேண்டுமென்று சமைத்த சோற்றை முழுவதும் |
|
உண்டு |
– |
அமுது செய்தவனாயும் |
|
கோ நிரை அவை மேய்த்து காத்தவன் |
– |
பசுக்கூட்டங்களை மேய்த்து ரக்ஷித்தவனாயுமுள்ள பெருமான் |
|
உகந்து இனிது உறை கோயில்; |
||
|
குளிர் வார் பொழில் |
– |
குளிர்ந்து பரந்த சோலைகளிலே, |
|
கொண்டல் ஆர் முழவில் |
– |
மேகங்களினுடைய மிக்க கோஷம்உண்டாகும் போது |
|
குலம் மயில் நடம் ஆட |
– |
கூட்டங் கூட்டமான மயில்கள் கூத்தாடப் பெற்றதும், |
|
வண்டு இசைபாடிடு |
– |
வண்டுகள் (மயில்களின் கூத்தாட்டத்திற்குத் தகுதியாக) இசைபாடப் பெற்றதுமான |
|
நாங்கூர் |
– |
திருநாங்கூரில் |
|
வண்புருடோத்தமம் |
||
English Translation
The Lord who gulped all the food-offering, –that the cowherd-folk had made for Indra, — then lifted a mount to protect the cows, resides at Nangur, –amid groves resounding with the bees sing and the peacocks dance, –in the temple of Van-Purushottamam.
