(1261)
பருங்கை யானையின் கொம்பினைப் பறித்ததன் பாகனைச் சாடிப்புக்கு,
ஒறுங்க மல்லரைக் கொன்றுபின் கஞ்சனை உதைத்தவ னுறைகோயில்,
கரும்பினூடுயர் சாலிகள் விளைதரு கழனியில் மலிவாவி
மருங்கெ லாம்பொழி லோங்கிய நாங்கூர் வண்புரு டோத்தமமே.
பதவுரை
|
பரு கை யானையின் கொம்பினை பறித்து |
– |
பருத்த துதிக்கையையுடைய (குவலயா பீடமென்னும்) யானையினது தந்தங்களை பிடுங்கிக் கொன்று, |
|
அதன் பாகனை சாடி புக்கு |
– |
அந்த யானையின் பாகனையும் உயிர் தொலைத்திட்டு உள்ளே நுழைந்து |
|
மல்லரை ஒருங்க கொன்று |
– |
மல்லர்களை ஒன்றுசேர முடித்திட்டு |
|
பின் கஞ்சனை உதைத்தவன் |
– |
அதற்குப் பிறகு கம்ஸனை முடித்தருளிய கண்ணபிரான் |
|
உறை கோயில் |
– |
நித்யவாஸம் பண்ணுமிடம்; |
|
கரும்பினூடு உயர் சாலிகள் விளைதரு கழனியில் மலி வாவி |
– |
கருப்பஞ்சோலைகளின் இடையே ஓங்கி வளரானின்ற செந்நெற் பயிர்கள் விளையப்பெற்ற கழனிகளில் நிறைந்திருக்கிற நடைவாவிகளினுடைய |
|
மருங்கு எலாம் |
– |
பக்கங்களிலெல்லாம் |
|
பொழில் ஓங்கிய |
– |
சோலைகள் வளர்ந்திருக்கப் பெற்ற |
|
நாங்கூர் |
– |
திருநாங்கூரில் |
|
வண்புருடோத்தமம் |
||
English Translation
The Lord who plucked the tusk of the rutted elephant, killed it, killed the mahout, killed the wrestlers, and killed Kamsa, resides at Nangur, -where sugarcane and paddy grow tall in fields watered by big wells, and groves touch the sky, -In the temple of Van-Purushottamam.
