(1259)

(1259)

பல்ல வந்திகழ் பூங்கடம் பேறியக் காளியன் பணவரங்கில்,

ஒல்லை வந்துறப் பாய்ந்தரு நடஞ்செய்த உம்பர்க்கோ னுறைகோயில்,

நல்ல வெந்தழல் மூன்றுநால் வேதமை வேள்வியோ டாறங்கம்,

வல்ல வந்தணர் மல்கிய நாங்கூர் வண்புரு டோத்தமமே.

 

பதவுரை

பல்லவம் திகழ் பூ கடம்பு ஏறி

தளிர்கள் விளங்காநின்ற பூத்த கடம்ப மரத்தின்மேல் ஏறி

அ காளியன் பணம் அரங்கில்

அப்படிப்பட்ட (கொடியனான) காளியமுடைய படங்களாகிற நாட்ய  ஸ்தலத்தில்

ஒல்லை வந்து உறபாய்ந்து

திடீரென்று வந்து சிக்கனக் குதித்து

அரு நடம் செய்த

அருமையான கூத்தாட்டம் செய்த

உம்பர் கோன்

தேவாதி தேவன்

உறைகோயில்

வாழுமிடம்;

வெம் தழல் மூன்று

த்ரேதாக்நிகளையும்

நால் வேதம்

நான்கு வேதங்களையும்

ஐ வேள்வியோடு

பஞ்ச மஹாயஜ்ஞங்களையும்

ஆறு அங்கம்

வேதாங்கங்கள் ஆறையும்

வல்ல

அதிகரித்து ஸமர்த்தர்களான

நல்ல அந்தணர்

நல்ல பிராமணர்கள்

மல்கிய

நிறைந்திருக்கப்பெற்ற

நாங்கூர்

திருநாங்கூரில்

வண் புருடோத்தமம்

 

English Translation

The Lord of gods who came as a cowherd-lad, climbed up the Kadamba tree, and leapt on the hoods of the snake Kaliya, then danced freely over it, resides at Nangur, –amid Vedic seers who tend to the three fires, recite the four Vedas, perform the five Sacrifices, and master the six Angas, –in the temple of Van-Purushottamam.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top