(1258)
கம்ப மாகட லடைத்திலங் கைக்குமன் கதிர்முடி யவைபத்தும்
அம்பி னாலறுத்து, அரசவன் தம்பிக்கு அளித்தவ னுறைகோயில்
செம்ப லாநிரை செண்பகம் மாதவி சூதகம் வாழைகள்சூழ்
வம்பு லாம்கமு கோங்கிய நாங்கூர் வண்புரு டோத்தமமே.
பதவுரை
|
கம்பம் மா கடல் அடைத்து |
– |
(கண்டபோதே) நடுக்கத்தை விளைப்பதான பெரிய கடலிலே ஸேதுகட்டி |
|
இலங்கைக்கு மன் கதிர் முடி அவை பத்தும் |
– |
இலங்கைக்கு அதிபதியான இராவணனுடைய ஒளிவிடுகின்ற தலைகள் பத்தையும் |
|
அம்பினால் அறுத்து |
– |
பாணங்களினால் அறுத்து |
|
அவன் தம்பிக்கு அரசு அளித்தவன் |
– |
அவ்விராவணன் தம்பியான விபீஷணாழ்வானுக்கு இராஜ்யமளித்த இராமபிரான் |
|
உறை கோயில் |
– |
எழுந்தருளியிருக்குமிடம் எதுவென்றால், |
|
செம் பலா நிரை செண்பகம் மாதவி சூதகம் வாழைகள் சூழ் |
– |
பலாமரங்களின் செல்விய வரிசைகளும் செண்பக மரங்களும் குருக்கத்திச் செடிகளும் மாமரங்களும் வாழை மரங்களும் (ஆகிய இவற்றால்) சூழப்பட்டு, |
|
வம்பு உலாம் கமுகு ஓங்கிய |
– |
பரிமளம் வீசுகின்ற பாக்கு மரங்கள் ஓங்கி வளரப்பெற்ற |
|
நாங்கூர் |
– |
திருநாங்கூரில் |
|
வண்புரு டோத்தமம் |
– |
வண்புருஷோத்தம மென்னும் திவ்யதேசமாம். |
English Translation
The Lord who made a bridge over the sea and entered Lanka, felled the ten crowned heads of the Rakshasa king, then gave the kingdom to his younger brother, resides at Nangur, –surrounded by groves with red Jackfruit, Mango, Plantain, Areca and Senbakam, Madavi, whose fragrances mix and float in the air, –in the temple of Van-Purushottamam.
