(1203)
தாராய தண்டுளவ வண்டுழுத வரைமார்பன்,
போரானைக் கொம்பொசித்த புட்பாக னென்னம்மான்,
தேராரும் நெடுவீதித் திருவாலி நகராளும்,
காராயன் என்னுடைய கனவளையும் கவர்வானோ.
பதவுரை
|
தார் ஆய தண் துள்பம் வண்டு உழுத வரை மார்பன் |
– |
மாலையாகிய திருத்துழாயிலுள்ள வண்டுகளாலே (தேனும் கண்ணமுங்கொண்டு) சேறு செய்யப்பட்ட மலைபோன்ற திருமார்பையுடையவனும் |
|
போர்ஆனை கொம்பு ஒசித்த |
– |
போர்புரிய நின்ற (கம்ஸனது) யானையினுடைய தந்தங்களை முறித்தொழித்தவனும் |
|
புள் பாகன் |
– |
கருடனை வாஹநமாகக் முறித்தொழித்தவனும் |
|
என் அம்மான் |
– |
எனக்கு ஸ்வாமியானவனும் |
|
தேர் ஆரும் நெடுவீதி |
– |
திருத்தேர் எழுந்தருள்வதற்குப் பாங்கான பெருமை பொருந்திய வீதிகளையுடைய |
|
திரு ஆலி நகரி ஆளும் |
– |
திருவாலி நகரை ஆள்பவனுமான |
|
கார் ஆயன் |
– |
கரியகோலக் கண்ணபிரான் |
|
என்னுடைய |
– |
(வேறு புகலற்றிருக்கிற) என்னுடைய |
|
கனம் வளையும் |
– |
பொன் வளைகளையும் |
|
கவர்வானை |
– |
அபஹரிப்பனோ! (அபஹரிப்பது தகுமோ). |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கீழ்ப்பாட்டொன்றும், இப்பாட்டுக்கு மேற்பாட்டுக்களும் வயலாலி மணவாளனையே முன்னிலைப்படுத்திச் சொல்லுவனவாயிருக்க, இப்பாட்டொன்றே அவனைப் படர்க்கையாக்கிப் பேசுவது அநுபவம் போகிற போக்குக்களாம் இவை.
***- திருத்துழாய் மாலையில் மதுவெள்ளத்தாலே சேறு செய்யப் பெற்ற திருமார்வையுடையவனும், கம்ஸடைய அரண்மனை வாசலில் புகும்போதே தன்னைக் கொல்லுவதாகச் சீறிவந்த குவலயபீடமென்னு மதயானையின் தந்தங்களை முறித்தொழித்தவனும், அடியார்களிருக்குமிடத் தேறச் சென்று உதவுகைக்காகப் பெரிய திருவடியை வாஹநமாகவுடையவனுமான வயலாலி மணவாளன் என்னுடைய நாண் மடம் அச்சும் முதலிய ஆத்குணங்களைக் கொள்ளை கொண்டவளவோடு த்ருப்திபெறாமல் கையில் வளைகளையும் கவர்ந்துகொண்டானே! என்கிறாள்.
English Translation
O Lord wearing a garland of cool Tulasi over a mountain-like chest, -which the bumble bees dig into, – O Lord who plucked the elephant tusk, O Lord who rides the Garuda bird, my Master, who rules over the chariot, is it right to convert my bangles?
