(1204)
கொண்டரவத் திரையுலவு குரைகடல்மேல் குலவரைபோல்,
பண்டரவி னணைக்கிடந்து பாரளந்த பண்பாளா!
வண்டமரும் வளர்ப்பொழில்சூழ் வயலாலி மைந்தா! என்
கண்டுயில்நீ கொண்டாய்க்கென் கனவளையும் கடவேனோ!
பதவுரை
|
பண்டு அரவம் திரை உலவு குரை கடல்மேல் |
– |
முற்காலத்தில் பெரிய கோஷத்தையுடைய அலைகள் உலாவுகின்ற பரந்த திருப்பாற்கடலிலே |
|
கொண்டு |
– |
திருவுள்ளங்கொண்டு |
|
அரவு இன் அணை |
– |
ஆதிசேஷனாகிற இனிய படுக்கையிலே |
|
குலம் வரை போல் |
– |
சிறந்த மலைபோலே |
|
கிடந்து |
– |
பள்ளிகொண்டவனாயும் |
|
பார்அளந்த |
– |
(திரிவிக்கிரமனாய்) பூமியை அளந்தவனாயுமுள்ள |
|
பண்பு ஆளா |
– |
தயாளுவானவனே! |
|
வண்டு அமரும் வளர் பொழில் சூழ் |
– |
வண்டுகள் படித்து ஓங்கின சோலைகளால் சூழப்பட்ட |
|
வயல் |
– |
கழனிகளையுடைய |
|
ஆலி |
– |
திருவாலியி லெழுந்தருளியிருக்கிற |
|
மைந்தா |
– |
நித்ய யௌவனசாலியான பெருமானே; |
|
என் கண் துயில் |
– |
எனது கண்ணுறக்கத்தை |
|
நீ கொண்டாய்க்கு |
– |
போக்கடித்த உனக்கு |
|
என் கனம் வளையும் |
– |
எனது பொன்வளைகளையும் |
|
கடவேனோ |
– |
இழக்கக்கடவேனோ? |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ஆர்த்தரான பக்தர்களுடைய கூக்குரல் கேட்பதற்குப் பாங்கானவிடமென்று திருப்பாற்கடலைத் திருவுள்ளம்பற்றி அங்கே பள்ளிகொண்டிருக்கும் பெருமானே! அங்ஙனம் அங்கே பள்ளி கொண்டிருக்கையில் ஒருகால் தேவேந்திரனுடைய கூக்குரல் கேட்டுப் பதறியெழுந்து மாவலிபக்கலிலே கணுருவாய் வந்து திரிவிக்கிரமனாகி உலகளந்த பெருமானே! இப்போதும் அன்பர்களேக் காப்பதற்கென்றே திருவாலியில் நித்யஸந்நிதி பண்ணியிருக்குமவனே! நீ இப்படிப்பட்ட குணசாலியாயிருந்து வைத்து என்னுடைய கண்ணுறக்கத்தையும் அபஹரித்துக் கைவளையையும் அபஹரித்தாயே! இது என்ன முறையை என்கிறாள்.
இப்பாட்டால், இரவும் பகலும் உன்னையே சிந்தித்துக்கொண்டு கண் உறங்கப் பெறாமல் மேனி மேலிந்து போனேன் என்றாராயிற்று.
English Translation
O Lord who came in the yore as the form reclining in sea on a snake! O Lord who measured the Good Earth in two tall strides and took it! Bumble-bees humming eternally, fresh bowers surround your temple. O Prince of Vayalali, you took my sleep, must you take my bracelet too?
