(1136)

(1136)

பிறையுடை வாணுதல் பின்னை திறத்து முன்னொரு கால்செரு வில்லுருமின்,

மறையுடை மால்விடை யேழடர்த்தாற் கிடந் தான்தடஞ் சூழ்ந்தழ காயகச்சி,

கறையுடை வாள்மற மன்னர்க்கெடக் கடல் போல முழங்கும் குரல்கடுவாய்,

பறையுடைப் பல்லவர் கோன்பணிந்த பரமேச்சுர விண்ணக ரமதுவே.

 

பதவுரை

முன்னே ஒருகால்

–

முன்னொருகால்

பிறைவாள் உடை நுதல் பின்னைதிறத்து

–

சந்திர கலைபோன்று ஒளியையுடைத்தான  நெற்றியையுடையளான நப்பின்னைக்காக

உருமின்

–

இடிபோன்ற கரிஜனையையுடையவைகளாய்

மறை உடை

–

எதிர்த்து வருகையை யுடையவைகளான

மால் விடை ஏழ்

–

பெரிய ஏழு ரிஷபங்களை

செருவில்

–

போர்க்களத்தில்

அடர்த்தாற்கு

–

வலியடக்கின பெருமானுக்கு

இடம்

–

இருப்பிடமாவது

தடம் சூழ்ந்து அழகாய கச்சி

கறை உடை வாள்

–

ரத்தக்கறை மாறாத வாளை யுடையவர்களும்

மறம்

–

த்வேஷமுடையவர்களுமான

மன்னர்

–

எதிரரசர்க்ள

கெட

–

முடிந்துபோம்படியக

கடல்போல் முழங்கும் குரல்

–

கடல்போலே கோஷம் செய்கிற குரலையுடைய

கடுவாய்ப் பறை உடை

–

கடுவாய்ப்பறையை உடையவனான

பல்லவர் கோன்–;

பணிந்த–;

பரமேச்சுர விண்ணகரம் அதுவே–.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- உருமு – ‘உரும்’ என்றாலும் ‘உருமு’ என்றாலும் இடிக்குப் பெயர்:  இலக்கணையால் இடி போன்ற குரலைச் சொல்லுகின்றதிங்கெனக் கொள்க.

கடுவாய்ப்பறையுடை – பல்லவராஜனிடமிருந்த பறைக்கு—-‘கடுவாய்ப்பறை’ என்று பெயர்வழங்கி வந்ததாகச் சில செப்பேடுகளிற் காண்கிறது.

 

English Translation

For the sake of the moon-faced Nappinnai, the Lord fought seven strong bulls. He resides in beautiful Kanchi surrounded by water tanks. Our Pallava king has war-drums that roll like the roaring seas, dispatching enemy kings to the sharp edge of his mighty sword. He comes to offer worship in the temple of Paramecchura Vinnagaram.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top