(1133)
திண்படைக் கோளரி யினுரு வாய்த் திறலோனக லம்செரு வில்முனநாள்,
புண்படப் போழ்ந்த பிரானதிடம் பொரு மாடங்கள் சூழ்ந்தழ காயகச்சி,
வெண்குடை நீழல்செங் கோல்நடப் பவிடை வெல்கொடி வேற்படை முன்னுயர்த்த,
பண்புடைப் பல்லவர் கோன்பணிந்த பரமேச்சுர விண்ணக ரமதுவே.
பதவுரை
|
முனநாள் |
– |
முன்னொரு காலத்திலே |
|
திண் படை |
– |
கூர்மையான (நகங்களாகிற) ஆயதங்களையுடைய |
|
கோள் அரியின் உரு ஆய் |
– |
வலிமிக்க நரஸிம்ஹ மூர்த்தியாய்த் தோன்றி |
|
செருவில் |
– |
போர்க்களத்தில் |
|
திறலோன் அகலம் |
– |
மஹாபலசாலியான இரணியனது மார்வை |
|
புண் பட போழ்ந்த |
– |
புண்படும்படி கிழித்தெறிந்த |
|
பிரானது |
– |
எம்பெருமானுக்கு |
|
இடம் |
– |
இருப்பிடமாவது, |
|
பொரு மாடங்கள் சூழ்ந்து |
– |
ஒன்றோடொன்று சேர்ந்திருக்கிற மாடங்கள் நிறைந்திருப்பதனால் |
|
அழகாய |
– |
அழகுபொலிந்திருக்கிற |
|
கச்சி |
– |
கச்சிப்பதியிலே, |
|
வெண் குடை நீழல் |
– |
வெண் கொற்றக்குடையின் நிழலில் (வீற்றிருந்துகொண்டு) |
|
செங்கோல் நடப்ப |
– |
தனது கட்டளை விலைச்செல்லும்;படி (அரசாண்டவனும்) |
|
விடம் வெல் கொடி |
– |
பாம்பாகிற வெற்றிக்கொடியையும் |
|
வேல் படை |
– |
வேல் என்னு மாயுதத்தையும் |
|
முன் உயர்த்த |
– |
சேனைகளின்முன்னே உயர எடுத்தவனும் |
|
பண்பு உடை |
– |
நீதி தவறாதவனுமான |
|
பல்லவர் கோன்–: |
||
|
பணிந்த-: |
||
|
பரமேச்சுரவிண்ணகரம் அதுவே–. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- பல்லவராஜனுடைய பெருமேன்மையைப் பேசுகிற மூன்றாமடியின் பிற்பகுதியில்“விடவெல் கொடி” என்றும், “விடை வெல்கொடி” என்றும், “விறல் வெல்கொடி” என்றும்மூன்று வகையான பாடங்கள் உள்ளனவாக வியாக்கியானம் காண்கிறது. முந்தின பாடத்தில்விடம் என்றது விஷமுடைத்தான நாகத்தைச் சொன்னபடியாய் நாகக்கொடியோன் என்றதாகிறது.
இரண்டாவது பாடமே பெரும்பான்மையாக வழங்குகின்றது: விடை என்று இளம் பாம்புக்கும் பெயருண்டென்று பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்கிறார். எருது என்னும் பொருளையேகொண்டாலும் குறையில்லை: பல்லவனுக்கு ஆதிகாலமாக விருஷபக்கொடி இருந்ததென்றும், பின்பு நாகலோகத்தளவுஞ் சென்று வென்றுவந்தது காரணமாக நாகக்கொடி உண்டாயிற்றென்றும் வரலாறு உள்ளதாகச் சொல்லக் கேள்வியுண்டு,
திண்படை – நரஸிம்ஹமூர்த்திக்கு நகங்கள் தவிர வேறு ஆயதமொன்று மில்லாமையினால் அந்த நகங்களையே இங்குத் திண்படை யென்கிறார்.
English Translation
The strong man-lion form wielded weapons that destroyed the mighty chest of Hiranya in a fierce fight. He resides in Kanchi surrounded by thickly populated mansion. The white-parasoled scepter-holding serpent-ensign spear-wielding Pallava king comes to offer worship in the temple of Paramecchura Vinnagaram.
