(1116)
பொன்குலாம் பயலை பூத்தன மெந்தோள் பொருகயல் கண்துயில் மறந்தாள்,
அன்பினா லுன்மே லாதரம் பெரிது இவ்வ ணங்கினுக் குற்றநோ யறியேன்,
மின்குலா மருங்குல் சுருங்கமேல் நெருங்கி வீங்கிய வனமுலை யாளுக்கு,
என்கொலாம் குறிப்பி லென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே.
பதவுரை
|
இடவெந்தை யெந்தை பிரானே!-; |
||
|
(இப்பெண்பிள்ளையினுடைய) |
||
|
மெல் தோள் |
– |
மென்மைதங்கிய தோள்களானவை |
|
பொன் குலாம் பயலை புத்தன |
– |
பொன்னிறமென்று சொல்லத்தக்க பசலை நிறத்தைக் கொண்டன; |
|
பொரு கயல் கண் துயில் மறந்தாள் |
– |
ஒன்றோடொன்று போர் செய்கிற இரண்டு மீன்கள் போன்ற கண்களிலே உறக்கத்தை மறந்துவிட்டாள்; |
|
உன் மேல் |
– |
உன் விஷயத்திலே |
|
அன்பினால் |
– |
ஆசையினாலே |
|
ஆதரம் பெரிது |
– |
ஆதரவு பெருகிச் செல்லுகின்றது; |
|
இவ் அணங்கினுக்கு உற்ற நோய் அறியேன் |
– |
இப்பெண்ணுக்கு உண்டான வியாதியை அறிகின்றே னில்லை; |
|
மின் குலாம் மருங்குல் சுரங்க |
– |
மின்னல்போன்று கொண்டாடத்தக்க இடையானது துவளும்படியாக |
|
மேல் நெருங்கி |
– |
மார்பின்மேலே ஒன்றோடொன்று நெருக்கமுற்று |
|
வீங்கிய |
– |
வளர்ந்துவாராநின்ற |
|
வனம் முலையாளுக்கு |
– |
அழகிய முலைகளையுடையளான இம்மகளுக்கு |
|
என் ஆம் கொல் |
– |
என்ன ஆகுமோ! |
|
குறிப்பில் என் நினைந்திருந்தாய் |
– |
(இவளைப்பற்றித்) திருவுள்ளத்தில் என்ன நினைத்திருக்கிறாய்?. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- பசலை நிறத்தைப்பற்றி குறுந்தொகையில்; ஒரு செய்யுளுண்டு. அதாவது– “ஊருண்கேணி யுன்டுறைத் தொக்க பாசியன்றேபசலை, காதலர் தொடுவுழித் தொடுவுழி நீங்கி விடுவுழி விடுவுழிப் பரத்தலானே.” (399.) என்பதாம். ஊரிலுள்ள ஜனங்களாலே நீருண்ணப் பெறுகிற கேணியினுள்ளே படர்ந்து கிடக்கும் பாசி போன்றது பசலைநிறம்; தண்ணீரில் நாம் கை வைத்தோமாகில் கைபட்ட விடங்களில் பாசி நீங்கும்; கையை எடுத்துவிட்டோமாகில் அவ்விடமெல்லாம் பாசி மூடிக்கொள்ளும்; அதுபோல, கணவனுடைய கைபடுமிடங்களில் பசலைநிறம் நீங்கும்; அணைத்த கை நெகிழ்த்தவாறே அப்பசலைநிறம் படரும்; ஆதலால் பாசிபோன்றது பசலைநிறம் என்றபடி. (தொடுவுழித் தொடுவுழி – தொட்டவிடங்கள்தோறும். விடுவுழி விடுவுழி–விட்ட விடங்கள் தோறும். பரத்தலான்-வியாபிக்கிறபடியினாலே.)
(இவ்வணங்கினுன்குற்ற நோயறியேன்.) எம்பெருமானே! இவளுக்கு இப்படிப்பட்ட மனோவியாதியுண்டானது உன்னுடைய கடாக்ஷ்த்தில் ஆசைப்பட்டா? புன்முறவலில் ஆசைப்பட்டா! திருமேனியோடணைய ஆசைப்பட்டா? என்று நிச்சயிக்க மாட்டுகிறிலேன் என்றவாறு.
மூன்றாமடியின் உள்ளுறை பொருளாவது:- “என்றனளவன்றால் யானுடைய வன்பு” என்னுமாபோலே ஆச்ரயத்தினளவல்லாத பக்திப்பெருங் காதலையுடையேன். என்றவாறு. (குறிப்பில் என்னினைந்திருந்தாய் இடவெந்தை யெந்தைபிரானே!) ‘தாய் உதவுவள், தமப்பன் உதவுவன், உறவினர் உதவுவர்; நமக்கென்ன? என்று நினைத்திருக்கிறாயோ? இப்படியாகில் நீ பரமபதத்தைவிட்டு இந்நிலத்திலே வந்து திருவிடவெந்தையிலே ஸந்நிதிபண்ணியிருப்பது பிரயோஜநமற்றதாகுமிறே என்றவாறு.
English Translation
She has lost her bangle pair, become pale and senseless, her warring fish-like eyes never close, O! Her love for you swells, I cannot decipher what is ailing my precious daughter. Her twin breasts are swollen, her lightning-waist has shriveled more; what is going to happen, how will lit end? Now tell me what do you intend to do with her, Idavendai Endai, my Lord, O!
