(1115)

(1115)

அலங்கெழு தடக்கை யாயன்வா யாம்பற் கழியுமா லென்னுள்ளம் என்னும்,

புலங்கெழு பொருநீர்ப் புட்குழி பாடும் போதுமோ நீர்மலைக் கென்னும்,

குலங்கெழு கொல்லி கோமள வல்லிக் கொடியிடை நெடுமழைக் கண்ணி,

இலங்கெழில் தோளிக் கென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே.

 

பதவுரை

இடவெந்தை எந்தை பிரானே!-;

அலம் கெழு தடகை ஆயன் வாய் ஆம்பற்கு என் உள்ளம் அழியும் என்னும்

‘கலப்பை விளங்குகின்ற பெரிய திருக்கையை யுடையனான கோபால க்ருசணனுடைய திருப்பவளத்தில வைத்து ஊதுகிற இலைச்சூழலோசைக்கு என்னெஞ்சு அழிகின்றது’ என்கிறாள்;

புலம் கெழு

மநோஹரமான

பொரு நீர்

அலையெறிகின்ற நீர்ப்பெருக்கையுடைய

புட்குழி

திருப்புட்புழி விஷயமாக

பாடும்

பாட்டுகள் பாடாநின்றாள்;

நீர்மலைக்கு போதுமோ என்னும்

திருநீர்மலைக்குப் போவோமென்கிறாள்;

குலம் கெழு கொல்லி கோமள வல்லி

மிகச்சிறந்த கொல்லி மலையிலுள்ள பாவை போன்றவளும்

கொடி இடை

வஞ்சிக்கொடிபோன்ற இடையையுடையவளும்

நெடு மழை கண்ணி

பெருமழைபோலே நீர்த்தாரைகள் பெருகப்பெற்ற கண்களை  யுடையவளும்

இலங்கு எழில் தோளிக்கு

விளங்குகின்ற அழகிய தோள்களையுடையவளுமான இப்பெண்பிள்ளை திறத்திலே

என் நினைந்திருந்தாய்!-.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஆம்பல் என்ற சொல் பலபொருள்களுடையது; இங்கு இசைச் சூழலென்னும் பொருளது.  குழலூதுபவன் கண்ணபிரானாயிருக்க, அலங்கெழுதடக்கையாயன் என்று ஹலாயு தனான பலராமனைச் சொல்லிற்றென்னென்னில்;  1.  “ மீனோடாமை கேழலரிகுறளாய் முன்னு மிராமனாய்த்தானாய்ப், பின்னுமிராமனாய்த்தாமோதரனாய்க் கற்கியுமானான்” என்ற ஒற்றுமை நயம்தோற்றச் சொன்னபடி  2  “ அலம்புரிதடக்கையாயனே !” என்றார் கீழும்;  3. “அலமுமாழிப் படையுமுடையான்” என்பர் மேலும். குலங்கெழுகொல்லிக் கோமளவல்லி ஸ்ரீ ‘கொல்லி’ என்பதற்கே இலக்கனையால் கொல்லிமலையிலுள்ள பாவைபோன்றவள் என்று பொருள் கொள்ளலாம்;  அன்றி, கொல்லி, சொல்லிமலையிலுள்ள, கோமளவல்லி–அழகிய கொடிபோன்ற பாவையையொத்தவள் என்றும் உரைக்கலாம்,  (கொல்லிப் பாவையைப்பற்றின விவரணம்; இத்திருப்பதிகத்தின் முதற்பாட்டினுரை யிற் காணத்தக்கது.)

நெடுமழைக்கண்ணி = பரமபக்தர்களின் நிலைமையைச் சொல்லுமிடத்து.  “ஆஹ்லாதசித நேத்ராம்பு:”  (குளிர்ந்த ஆநந்தபாஷ்பம் தளும்பப்பெற்றவன்) என்று சொல்லியிருக்கிறபடியே

எப்போதும் ஆழ்வார் பகவத்குணங்களை நினைந்து கண்ணுங்கண்ணிருமா யிருக்குமிருப்பைச் சொல்லுகிறது. பிள்ளை திருவுள்ளம்.

 

English Translation

“My heart breaks to hear the flute on the lips of Lotus-Lord, — he has four arms strong like the plough bull”, — she sings for the Resident of Putkuli watered by cool and fragrant water resources. “Let us got to Neermalai” says my life-like daughter. Now tell me what do you intend to do with her, Idavendai Endai, my Lord, O!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top