(1092)

(1092)

பாய்ந்தானைத் திரிசகடம் பாறிவீழப் பாலகனா யாலிலையில் பள்ளியின்பம்

ஏய்ந்தானை, இலங்கொளிசேர் மணிக்குன்றன்ன ஈரிரண்டு மால்வரைத்தோ ளெம்மான்றன்னை,

தோய்ந்தானை நிலமகள்தோள் தூதிற்சென்றப் பொய்யறைவாய்ப் புகப்பெய்த மல்லர்மங்கக்

காய்த்தானை, எம்மானைக் கண்டுகொண்டேன் கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.

 

பதவுரை

திரி சகடம்

உருளுகிற சகடமானது

பாறி

சின்னபின்னமாகச் சிதறி

வீழ

விழும்படி

பாய்ந்தானை

திருவடியாலுதைத்தவனும்

பாலகன் ஆய்

சிறுபிள்ளையாய்

ஆல் இலையில்

ஆலந்தளிரிலே

பள்ளி இன்பம் ஏய்ந்தானை

திருக்கண்வளர்தலாகிற ஸுகத்தை அநுபவித்தவனும்

இலங்கு ஒளி சேர்

மிக்க ஒளியை யுடைத்தான

மணி குன்று அன்ன

ரத்னமயமான பர்வதம் போன்றவனும்

மால் வரை

பெரிய மலைபோன்ற

ஈர் இரண்டு தோள் எம்மான் தன்னை

நான்கு திருத்தோள்களையுடைய ஸ்வாமியானவனும்

நிலம் மகள் தோள் தோய்ந்தானை

பூமிப்பிராட்டியின் தோளோடே அணைந்தவனும்

தூதின் சென்று

(பாண்டவர்களுக்குத்) தூது செய்யுந் தொழிலுடனே (துரியோதனனிடம்) எழுந்தருளி

பொய் அவ் அறை வாய்புக பெய்த

(அத்துரியோதனன்) க்ருத்ரிமமாகச் செய்துவைத்த அந்த நிலவறையி  னுள்ளே நிறுத்தப்பட்டிருந்த

மல்லர்

மல்லர்கள்

மங்க

முடியும்படி

காய்ந்தானை

சீற்றங்காண்டவனுமான

எம்மானை

எம்பெருமானை

கடிபொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே கண்டுகொண்டேன்-.

 

English Translation

He smote the cart and broke it, he slept as a child on a fig leaf in Yogic trance; he has four radiant mountain-like arms that embrace the lotus-dame Lakshmi. He went as a messenger to Duryodhana and destroyed many mighty kings. Amid cool fragrant groves, I have seen Him in Talasayanam at Kadal Mallai.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top